இடுகைகள்

பாலைவனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலைத் தீய்க்கும் பாலைவனப் பயணத்தில் இயற்கையைப் புரிந்துகொள்ளும் பெண்! தடங்கள் -ராபின் டேவிட்சன்

படம்
  தடங்கள் ராபின் டேவிட்சன் தமிழில் – பத்மஜா நாராயணன் எதிர் வெளியீடு   அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி, ஆஸ்திரேலியாவின் பாலைவனத்தை தனியாக கடக்கிற பயணத்தை, அதற்கான திட்டமிடலை, போராட்டத்தை க்கூறுகிற கதை இது. நூல் மொத்தம் 300 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த பக்கங்கள் முழுவதும் ஒட்டகங்கள், அவற்றை வளர்ப்பது, பாதுகாப்பது, பராமரிப்பது பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. டூக்கி, கோலியாத், ஜெலிகா ஆகிய ஒட்டகங்களோடு ஆசிரியருக்கு இருக்கும் உறவானது, மனிதர்களோடு இருக்கும் உறவை விட உறுதியானதாக மாறுகிறது. டிக்கிட்டி எனும் பெண் நாயை ஆசிரியர் இழக்கும் சமயம், ஆசிரியரின் மனதிற்குள் நடக்கும் விரக்தி, வெறுமை நம்மையும் பற்றிக்கொள்கிறது. பாலைவனப் பரப்பு மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை   விளக்கும் பகுதிகள் சிறப்பாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன. வெப்பம், மிக அதிக வெப்பம், தாங்க முடியாத வெப்பம் என்பதே அங்கு பயணிப்பவர்கள் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை. இந்த நிலையில் ஒருவர் சந்திக்கும் அனுபவங்கள் என்னவாக இருக்கும்? காட்டு ஒட்டகங்களின் தாக்குதல், சுற்றுலா பயணிகளின் நாகரிகமே இல்லாத புகைப்பட வேட்கை,   வழிப்

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

சிவப்புநிற ஏரிப்படுகை - இறந்துபோன மரங்களின் கூடு

படம்
  சிவப்பு நிற மணல் மேடுகளைக் கொண்ட ஏரிப்படுகைகள்! டெட்வ்லீ சோசஸ்வ்லீ  நமீபியாவில் உள்ள நிலப்பகுதிகளைப் பற்றித்தான் வாசிக்கப் போகிறோம்.  இங்குள்ள டெட்வ்லீ  (deadvlei) மற்றும் சோசஸ்வ்லீ (sossusvlei)என்ற இரு ஆற்றுப்படுகைப் பகுதிகளும் முக்கியமான நிலப்பரப்புகள் ஆகும். இதனைச் சுற்றிலும் சிவப்பு நிற மணல் மேடுகள் அமைந்துள்ளன. நமீப் பாலைவனம், தெற்கு ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோரமாக நீண்டுள்ளது. இதன் பெரும்பாலான பகுதி, நமீபியாவில் உள்ளது.  இங்குள்ள மணல் சிவப்பு நிறத்திற்கு, அதிலுள்ள கனிமமான இரும்பு காரணமாகும்.  நீர்வளம் இல்லாத காரணத்தால், வண்டல்மண் ஏரிப்படுகை காய்ந்து வெடித்துப்போய் காணப்படுகிறது. இதில் வளர்ந்த மரங்களும் கூட சூரியனின் வெப்பத்தால் பட்டுப்போய் நின்றுகொண்டிருக்கின்றன. இந்த இறந்து போன மரங்களை அகாசியா மரங்கள் (Camel thorn) என்று அழைக்கின்றனர். இவை 1000 ஆண்டுகளைக் கடந்தும் வாழ்பவை என இயற்கை செயல்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். உலர்ந்து வெடித்துப்போயுள்ள நிலப்பரப்பில் வண்டல் மண்ணும் உப்பும் வெவ்வேறு விதமாக வடிவங்களில் காணப்படுகின்றன.  சோசஸ்வ்லீ (sossusvlei) கனமழை பெய்து சாவ்சாப் ஆற