இடுகைகள்

வேதிப்பொருட்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யுனிலீவரை பீதியடையச் செய்த மாமா எர்த் நிறுவனம் ! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நடிகை ஷில்பா, நிறுவனர்கள் வருண், கசல், மாமாஎர்த் கசல் ஆலாக் 34 வருண் ஆலாக் 38 மாமா எர்த்   குழந்தைகளுக்கான வேதிப்பொருட்கள் இல்லாத அல்லது அளவில் குறைந்த சோப்புகளை, ஷாம்பூகளை தயாரிப்பதும், சந்தைபடுத்தி வெற்றி பெறுவதும் கடினம். மாமாஎர்த் நிறுவனம், இந்த விஷயத்தில்தான் மகத்தான வெற்றி பெற்று யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. கடந்த ஆண்டில்தான், டவ் பிராண்டில் குழந்தைகளுக்கான சோப்புகள், ஷாம்புகள் அறிமுகமாகி உள்ளன. இந்த பிராண்ட், பல்வேறு உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு போட்டிபோட்டு விளம்பரம் செய்து வருகிறது. குறிப்பாக, மாமாஎர்த். யுனலீவரின் முதலீட்டாளர் ஒருவர், நிறுவனத்திடம் மாமாஎர்த்தோடு போட்டியிட்டு வெல்ல திட்டங்கள் இருக்கிறதா என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் மாமாஎர்த் நிறுவனம் தொடங்கி ஏழு ஆண்டுகள்தான் ஆகிறது. 2016ஆம் ஆண்டு ஆறு பொருட்களை விற்றது. இந்த நிறுவனத்தின் பொருட்கள், நாடெங்கும் 50 ஆயிரம் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மொத்த நிறுவன வருவாயில் 35 சதவீதம், மேற்சொன்ன கடைகளிலிருந்து கிடைக்கிறது. ‘’நாங்கள் போட்டியாளர்களைப் பா

எந்தெந்த பிளாஸ்டிக்குகளை எப்படி மறுசுழற்சி செய்வது?

படம்
  மறுசுழற்சி  பிளாஸ்டிக் பாலிமர்கள் நீளமான சங்கிலி பிணைப்புகளாலான மூலக்கூறுகளைக் கொண்டவை. கார்பன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் கீழே என்ன வகையான பிளாஸ்டிக் என்று எண்களால் குறிப்பிடப்பட்டிருக்கும்.  பெட் (PET) - பாலி எத்திலீன் டெரா பைத்தலேட் (Polyethylene Teraphthalate) பாட்டில், உணவு ஜார்கள், உடை, கார்பெட்டுகள், ஷாம்பு, மௌத்வாஷ் பாட்டில்கள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இவற்றை அடையாளப்படுத்தும் எண் 1. ஹெச்டிபிஇ (HDPE) - ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன் (High density polyethylene) சலவைத் திரவ பாட்டில்கள், நொறுக்குத்தீனி பெட்டிகள், பால் குடுவைகள், பொம்மைகள், வாளி, செடிவளர்க்கும் தொட்டிகள், குப்பைத்தொட்டிகள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 2. பிவிசி (PVC) - பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) கடன் அட்டைகள், ஜன்னல், கதவு பிரேம்கள், குழாய்கள், செயற்கை தோல்.  இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 3. எல்டிபிஇ (LDPE) - லோ டென்ஸிட்டி பாலி எத்திலீன் (Low Density Polyethylene) பேக்கேஜ் ஃபிலிம், பேக்குகள், பபிள்ரேப், நெகிழ்வுத் த

உணவைக் கெடாமல் பாதுகாக்க இத்தனை வேதிப்பொருட்கள் தேவை!

படம்
  உணவுப்பொருட்களில் பயன்படும் முக்கியப் பொருட்கள் பிரசர்வேட்டிவ். தொன்மைக்காலத்தில் உப்பு, வினிகர், வாசனைப் பொருட்கள், எண்ணெய் ஆகியவை பயன்பட்டன. இப்போது நிறைய வேதிப்பொருட்களை உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.  ஸ்டேபிலைசர்ஸ் இதில் எமுல்சிஃபையர்ஸ், திக்னர்ஸ், ஜெல்லிங் ஏஜெண்ட்ஸ், ஹியூமெக்டன்ஸ், ஆன்டி கேக்கிங் ஏஜெண்ட்ஸ்  ஆகிய பொருட்கள் உள்ளடங்கும்.  இதெல்லாம் எதற்கு? உணவு கெட்டுப்போகாமல் இருக்கத்தான்.  நைட்ரேட்ஸ் -நைடிரைட்ஸ் இறைச்சியில் நுண்ணுயிரிகள் வளராமல் தடுக்கும் வேதிப்பொருள். இதனை சேர்த்தால் இறைச்சியில் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும்.  ஆன்டிபயாடிக்ஸ் பண்ணை விலங்குகளின் இறைச்சியில், பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளில் பயன்படும் வேதிப்பொருள். எடுத்துக்காட்டு டெட்ராசைகிளைன்ஸ்.  ஹியூமெக்டன்ட்ஸ்  இவை, பொருளில் உள்ள ஈரப்பத தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பொருள் அதன் இயல்பான தன்மையில் சில காலம் நீடிக்கும். எடுத்துக்காட்டு துருவிய தேங்காய்.  ஆன்டி ஸ்டாலிங் ஏஜெண்ட்கள் சில பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இவை பேக்கரி உணவுகளில் ஈரப்பதமும், மென்மையும் குறை

ஒவ்வாமையோடு வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்- பொருட்களை வாங்கும்போது கவனிங்க!

படம்
              கவனம் கொள்ளாத வேறு சில ஆபத்துகள்! தாலேட்டுகளைப் பற்றி என்னென்ன ஆபத்துகள் என்று பார்த்தோம். அது மட்டும்தானா என்றால் கிடையாது. இது மலையாளப் படம் போல, ஒரே படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் குணச்சித்திர பாத்திரத்தில் நடிப்பார்கள். அதேபோல நிறைய வேதிப்பொருட்கள் உடலை பாதிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். அசிடோன் மூச்சுக்குழல், ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், தோல், மூளை, நரம்பியல் அமைப்பு என பாகுபாடில்லாம் நிறைய உறுப்புகளை பாதிக்கிறது. இங்கு குறிப்பிட்ட உறுப்புகள் குறைவுதான். அசிடோன் உள்ளே போகும்போது, உடலிலுள்ள நிறைய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பியூடேன், ஐசோபியூடேன் எடை குறைவான திரவம்தான். ஆனால் மூளையையும், நரம்பு அமைப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. உடலில் நடக்கும் வேதிவினைகளை மூளைதான் தீர்மானிக்கிறது. அதுவே சீர்குலையும்போது, உடல் தடுமாறி தளரும். திர்வ பெட்ரோலியம். ஏர் ஃப்ரெஷ்னர் வகைகளில், திரவ பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வண்டிக்கு போடுவதை உடலுக்குள் அனுப்பினால் உறுப்புகள் மைலேஜ் காட்டுமோ என நினைக்காதீர்கள். எல்லாம

பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?

பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது. மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் ப

கூல்ட்ரிங்க்ஸிலுள்ள கார்பன் டை ஆக்சைடு சூழலைப் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி குளிர்பானங்களில் கார்பனைப் பயன்படுத்துகிறார்கள். இதன்விளைவாக, சூழலில் கார்பன் அளவு அதிகரிக்குமா? இதற்கான பதிலை நான் நாமக்கல்லில் தயாரித்த டெய்லி - ஆரஞ்சு சோடாவை ஒரு சிப் அடித்தபடிதான் எழுதுகிறேன். நண்பர்களே, குளிர்பானத் தயாரிப்பு காரணமாக வெளியிடப்படும் கார்பன் வெளியீடு வேறு. அதனைக் குடித்துவிட்டு ஏப்பம் விடும்போது வரும் கார்பன் அளவீடு வேறு. மனிதர்கள் சராசரியாக பயன்படுத்தும் பொருட்களின் அளவுப்படி கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது. நீங்கள் கூறும் கார்பன் அளவு என்பது தொழில்துறையில் அளவிடுவார்கள். மற்றபடி குறிப்பிட்ட பயன்பாட்டால் எவ்வளவு என அளவிடுவதுதான் சரியான அளவு. கார்பன் டை ஆக்சைடு குளிர்பானத்தில் மிக குறைவான அளவே இருக்கும். அதனால் கார்பன் அதிகரிப்பு என்பது மேலோட்டமாக பிரச்னையை புரிந்துகொள்வது என்றே எனக்கு படுகிறது. குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு தீவைத்து எரிக்காமல் அதனை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கார்பனின் அளவையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். நன்றி - பிபிசி

கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி கண்ணாடி பாட்டில்களிலிருந்து எடுத்து குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே? அமெரிக்கப் படங்கள் நிறையப் பார்ப்பீர்கள் போல. ஆனால் அது உளவியல் சார்ந்ததே. இன்று கடைகளில் பாலிமர் அதாவது பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படுவது குறைந்து விட்டது. மற்றபடி பிளாஸ்டிக், கேன் என்பது வெரைட்டி காட்டும் வேலை. அதில் சுவை மாறுவது என்பது உங்கள் மனநிலையின் விளையாட்டு. நன்றி - பிபிசி