கடல்நீரில் தங்கம் உண்டா?
அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி
கடல்நீரில் தங்கம் உண்டா?
உலகிலுள்ள ஒவ்வொருவரும் கடல் நீரை அலசி ஆராய்ந்தால் நபர் ஒருவருக்கு நான்கு கி.கி. அளவுக்கு தங்கத்தை பெறமுடியும்.
கடல்நீர் சுழற்சி அடைகிறதா?
வடதுருவம், தென்துருவம் ஆகிய இருமுனைகளிலும் உள்ள கடல்நீர் கடிகார சுழற்சி, அதற்கு எதிர்சுழற்சி எனுமாறு நீரோட்ட சுழற்சியைக் கொண்டுள்ளன. செங்குத்து, கிடைமட்டம் என இரு வேறுபட்ட அளவுகளில் கடல்நீரோட்டம் உலகமெங்கும் சென்று வருகிறது.
கடல்நீரிலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன?
குளோரைடு, சோடியம், சல்பேட், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பைகார்பனேட், புரோமைடு, ஸ்ட்ரான்டியம், போரோன், புளுரைடு ஆகிய வேதிப்பொருட்கள் கடல்நீரில் உள்ளன.
கடலில் அலையடிக்க என்ன காரணம்?
பூமிக்கு கீழே நடக்கும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, காற்று ஆகியவை காரணமாக கடலில் அலைகள் உருவாகுகின்றன. பூமியின் ஈர்ப்புவிசை, நீரின் அழுத்தம் அலைகளை தொடர்ச்சியாக உருவாகி வரச்செய்கின்றன.
கடலின் ஆழம் என்ன?
கடலின் தோராய ஆழம் நான்காயிரம் மீட்டர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக