சீன மொழியைப் பரப்பும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு வயது 20

 

 

 



சீன மொழியைப் பரப்பும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு வயது 20


உலகில் உள்ள நூறு நாடுகளில் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டுகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் புதிதாக பத்து கிளைகள் பெலாரஸ்,. ரஷ்யா, கிரிபட்டி,லெசேதோ, மலேசியா, மெக்சிகோ, நிகரகுவா, ஸ்பெயின், ஹங்கேரி, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அமைக்கப்படவுள்ளன.

உலகளவில் சீன மொழி, கலாசாரத்தை பரப்புவதற்கான உருவாக்கப்பட்டவையே கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டுகள். இதன் வழியாக, சீனமொழியை கற்க விரும்புபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பாக பணியாற்றி பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருபவர்களுக்கு சீன அரசின் கல்வித்துறை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டன. இப்படியான வழங்கப்பட்ட விருதுகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 159.

பத்தாண்டுகளுக்கு மேலாக கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி வரும் இயக்குநர்களின் எண்ணிக்கை 33. 2004ஆம் ஆண்டில் தாஷ்கண்டில் நிறுவப்பட்டதே முதல் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட். தொடக்கத்தில் இதன் மாணவர்களின் எண்ணிக்கை இருநூறு. இப்போது ஊழியர்களின் கடினமான உழைப்பால் எண்ணூறாக மாறியுள்ளது. உஸ்பெகிஸ்தானுடன் சீனா 2800 தொழில் கூட்டுறவுகளை அமைத்துக்கொண்டுள்ளது. பேசுவது, கவனித்து புரிந்துகொள்வது ஆகியவற்றுக்கான பயிற்சிகளை கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் வழங்குகிறது. எழுதுவது, படிப்பது என்பதற்கான பயிற்சிகளை, பயிற்சி மையத்தில் வழிகாட்டலுடன் கற்றுக்கொள்ளலாம்.

சீனா டெய்லி - ஜாவோ யிமெங் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்