உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்கள் பட்டியல் - ஆசியா

 

 

 

 

 

மை கியு லின்
இயக்குநர், வினாமில்க்
வியட்நாம்
mai kieu lien
vinamilk


பிரான்சில் பிறந்து சோவியத் யூனியனில் கல்வி கற்ற பெண்மணி. 1992ஆம் ஆண்டு தொடங்கி வினாமில்க் நிறுவனத்தை லின் நடத்தி வருகிறார். நாட்டின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனம், வினாமில்க். பால் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக செயல்பட்டவர், பட்டம் பெற்றபிறகு வினாமில்கின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அரசு நிறுவனமான வினாமில்க், 2003ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

அன்னா மா மார்கரிட்டா பாட்டிஸ்டா டை
இயக்குநர் அயலா லேண்ட்
பிலிப்பைன்ஸ்
anna ma margarita bautista dy
ayala land

2008ஆம் ஆண்டு, நிலத்தை வாங்கி விற்கும் அயலா நிறுவனத்தின் கமிட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கடந்த ஆண்டுதான் நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார். வீட்டு விற்பனை, வணிக மால் ஆகிய வணிக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செய்து வருகிறார். அயலா நிறுவனம் ஹோட்டல், ரிசார்டுகள், வணிக மால்கள் வீடுகள், அலுவலகங்களை கட்டி விற்று வருகிறது. கடந்த ஆண்டு வருமானம் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்சில் நகரமயமாக்கல் வேகம் பிடித்து வருவதால், அயலா நிறுவனத்தின் வணிகம் அதிகரித்து வருவதில் வியப்பொன்றும் இல்லை.

சுபாலக் உம்புஜ்
தலைவர், தி மால் குழுமம்
தாய்லாந்து
supaluck umpujh
the mall group


சுபச்சாயின் ஏழு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை, உம்புஜ். இவர் தாய்லாந்தில் உள்ள சில்லறை விற்பனை வணிகத்தை கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டில் வருமானம் 1.7 பில்லியன் டாலர்களாக உள்ளது. எம்போரியம், எம்குவார்டர், எம் ஸ்பியர் என மூன்று மெகா திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார். 1981ஆம் ஆண்டு குழுமத்தின் வணிக மால் வணிகத்தில் பொறுப்பேற்றார். தற்போது ஒரு மில்லியன் சதுர மீட்டரில் பாங்காங் மால் ஒன்றை கட்டி வருகிறார். 2028ஆம் ஆண்டு இந்த மால் திறக்கப்படவிருக்கிறது. இந்த திட்டத்தை அமெரிக்காவின் ஏஇஜி நிறுவனத்தோடு சேர்ந்து செய்துவருகிறார்.

சான்டானிடா சரிகாபுடி
தலைமை நிதி அதிகாரி, சியாம் சிமெண்ட் குழுமம்
தாய்லாந்து

chantanida sarigaphuti
siam cement group

தெற்காசியாவின் பழமையான சிமெண்ட் நிறுவனம், சியாம். 2022ஆம் ஆண்டு தொடங்கி நிறுவனத்தின் திட்டமிடல் அதிகாரி, கருவூல தலைவராக இயங்கி வருகிறார். கடந்த ஆண்டு, நிறுவனத்தின் வருமானம் 12 சதவீதமாக குறைந்துவிட்டது. அமெரிக்காவிலுள்ள டவ் கெமிக்கல் நிறுவனத்துடன் சேர்ந்து பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதாக திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு, பிளாஸ்டிக் அளவு இரண்டு லட்சம் டன்களாக அதிகரிக்கவிருக்கிறது.

பாட்புரி சின்குல்கிட்னிவாட்
தலைமை நிதி அதிகாரி
பாங்சாக்
தாய்லாந்து
phatpuree chinkulkitnivat
bangchak

பாங்சாக்கில் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி. அக்டோபர் 2022ஆம் ஆண்டு முதலாக பொறுப்பேற்றிருக்கிறார். பாங்சாக் ஒரு ஆற்றல் நிறுவனம், பெட்ரோல், உயிரியல் எரிபொருள், தூய ஆற்றல் பொருட்களை தயாரித்து வருகிறது. எஸ்ஸோ என்ற நிறுவனத்தை கையகப்படுத்த பாட்புரி முக்கியப் பங்காற்றினார். தலைமை நிதி அதிகாரி ஆவதற்கு முன்னர், பாங்சாக்கின் துணை நிறுவனத்தில் நிதி அதிகாரியாக இருந்தார். தாய்லாந்து வங்கிகளில் பல்லாண்டு காலம் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டவர்.

மிவாகோ டிரஸ்ட்
தலைவர், இயக்குநர், மோரி டிரஸ்ட்
ஜப்பான்
miwako date
mori trust


2016ஆம் ஆண்டு மிவாகோ, தனது தந்தையிடமிருந்து நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். நிலங்களை வாங்கி விற்பது, கட்டுமானங்களை கட்டி விற்பதே மோரி டிரஸ்டின் வணிகம். கொரோனாவிற்கு பிறகு சுற்றுலா வணிகம் ஜப்பானில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள புதிய ஹோட்டல்களை உருவாக்கி வருகிறார் மிவாகோ டேட். இவரது அத்தை யோசிகோ மோரி. மோரி பில்டிங் நிறுவனத்தின் தலைவர். மோரி கலை அருங்காட்சியகத்தின் தலைவரும் இவர்தான். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த இடத்திற்கு பத்தொன்பது மில்லியன் பார்வையாளர்கள் வந்து பார்வையிட்டிருக்கிறார்கள்.  ரோப்போங்கி ஹில்ஸ் பூங்கா, ஷாங்காய் உலக நிதி மையம் ஆகிய கட்டுமானங்களை இவரது தலைமையில் கீழ் உருவாக்கினார்.

விவியன் செங் சி ஃபேன்
கூட்டு குழும இயக்குநர்
பெர்ஜயா
மலேசியா
vivienne cheng chifan
berjaya

பெர்ஜயா என்ற சில்லறை விற்பனை, நில விற்பனை, ஹோட்டல் குழுமத்தில் துணை இயக்குநர். தனது தொழில்வாழ்க்கையை குழுமத்தில் கணக்காளராக தொடங்கினார். அப்போது 1989ஆம் ஆண்டு. 2022ஆம் ஆண்டு சையது அலி சாகுல் அகமதுவுடன் சேர்ந்து துணை இயக்குநராக அறிவிக்கப்பட்டார். பின்னாளில் அலி நீக்கப்பட்டு நெரைன் டான் என்ற பெண்மணி சேர்க்கப்பட்டு பெண்கள் மட்டுமே உள்ள போர்டாக நிறுவனம் மாறியது.  

லைனட் வி ஆர்டிஷ்
தலைவர், இயக்குநர் லேண்ட் வங்கி
பிலிப்பைன்ஸ்
lynette v ortiz
land bank
நாட்டின் பெரிய அரசு வங்கியின் தலைவர், இயக்குநர். சிறுகுறு வணிகர்களுக்கு, மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிதியுதவிகளை வழங்கிவருகிறது லேண்ட் வங்கி. லைனட் வங்கியின் பதினோராவது தலைவர், இயக்குநர். கடந்த ஆண்டு அதிபர் இவரது பெயரை முன்மொழிந்தார். இதற்கு முன்னர் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியின் இயக்குநராக செயல்பட்டார்.

fortune asia 

https://substack.com/profile/5467650-ar/note/c-72561451

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://vietnamnews.vn/economy/1664606/mai-kieu-lien-named-among-fortune-s-top-100-most-powerful-women-in-asia.html&ved=2ahUKEwie4dLg-o2JAxWPp1YBHSE5BJcQh-wKegQIGRAC&usg=AOvVaw0BDAk_4DKXTJd9MbXcyolX


https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://fortune.com/2024/10/08/most-powerful-women-asia-business-world/&ved=2ahUKEwiLnc2k_Y2JAxX0lFYBHW6wEqsQFnoECBYQAQ&usg=AOvVaw0asqTPc8KdfpqKkQlpv4R-

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்