கலை எளிய மனிதர்களும் அணுகும் விதத்தில் இருக்கவேண்டும் - தேவோன் ரோட்ரிக்ஸ், டிக்டாக் ஓவியக்கலைஞர்
புதுயுக தலைவர்கள் - தேவோன் ரோட்ரிக்ஸ்
ஓவியக்கலைஞர்
ஓவியத்தைக் கற்கும்போது, ரோட்ரிக்ஸ் கனவு செல்சா பகுதியிலுள்ள கலைக் கண்காட்சியகத்தில் அவரது ஓவியங்களை இடம்பெறச்செய்வது, ஆனால் அவருக்கு அதுபற்றிய தேடலில் கிடைத்த அனுபவம், மரபான ஓவியங்களை குறிப்பாக நீ வரைவதை அங்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான். ரோட்ரிக்ஸ் வறுமையான நிலையில் வேறு இருந்தார். அவரது கனவு எளிதாக நிறைவேறாது என்று அவருக்கு தெரிந்தது. போர்ட்ரைடுகளை வரைந்துகொண்டிருந்தவர், காசு கொடுத்து அருங்காட்சியகம், கலைக்கண்காட்சிகளுக்கு போகக்கூட முடிந்ததில்லை.
மன்ஹாட்டனிலுள்ள ஓவியப்பள்ளிக்கு மாறியவர், ஓவியங்கள் வரைவதை நிறுத்தவில்லை. கிடைத்த நேரத்தில் சுரங்கப்பாதை, ரயில்நிலையம், பேருந்து என அறிமுகமற்றவர்களை படமாக வரைந்துகொண்டிருந்தார். பெருந்தொற்று காலத்தில் நிறைய போர்ட்ரைடுகளை வரைந்தார். சீன ஆப்பான டிக்டாக்கில் தான் படம் வரைந்து அதை அறிமுகமற்றவர்களுக்கு வழங்குவதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். இப்படியான முதல் பதிவு, ஐந்து மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அடுத்து, நான் சந்திக்கும் மனிதர்களின் முகம் எப்படியிருக்கும் என்று எனக்கு தெரியாது. வெளிப்படைத்தன்மையோடு மனிதர்கள் இருக்கவேண்டுமென விரும்புகிறேன். என்பவர், உலகம் முழுவதும் 33 மில்லியன் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். இன்று மிக பிரபலமான இணைய ஓவியர்களில் ரோட்ரிக்ஸ் முக்கியமானவர். ஃபோர்ட், ஹெச்பிஓ ஆகிய பிராண்டுகளோடு இணைந்து பணியாற்றி வருகிறார்.
முக்கியமாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சென்று, அதிபரை படமாக வரைந்து அதையும் டிக்டாக்கில் வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்று, ஓவிய வகுப்புகளை புதிய நவீன ஓவியர்களுக்காக நடத்தி வருகிறார். அதேசமயம் கலை என்பது அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டியது என்பதை நம்புகிறார். இங்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. உங்களுக்கு நீங்கள் செய்வதில் தெளிவிருந்தால், செய்ய முடிந்தால் அதை பின்பற்றி செல்லுங்கள் என நம்பிக்கையோடு கூறுகிறார்.
கவிஞர் மஹ்மூத் தார்விஷ் கூறுவதைப் போல நாங்கள் நம்பிக்கையைப் பேணுகிறோம். ரோட்ரிக்ஸைப் போலவே...
டைம் - சைமன் ஷா
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.devonrodriguezart.com/
&ved=2ahUKEwic1ba2uaiJAxUksVYBHVr3MPAQ-TAoAHoECBMQAQ&usg=AOvVaw1wtM11B6Ikk609xKIylPvI
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.instagram.com/devonrodriguezart/%3Fhl%3Den&ved=2ahUKEwic1ba2uaiJAxUksVYBHVr3MPAQFnoECC8QAQ&usg=AOvVaw1sjceFQuUoFF3pGPfc96Vs
கருத்துகள்
கருத்துரையிடுக