நூல்முகம் - வின்சென்ட் காபோ, ரிச்சர்ட் மஹாதேவ்(2)

6 நான் தமிழ் சினிமா பார்ப்பதில்லை சுதேசமித்திரன் பாதரசம் வெளியீடு இந்நூல் திரைப்படம் குறித்த ஜெ.பிஸ்மியின் களவுத்தொழிற்சாலை நூலை ஒத்ததே. சுதேசமித்திரன் திரைப்படத்தின் தன்மை, அதன் தட்டையான வடிவம், திரைக்கதை, திரைப்பட அரசியல், திரைப்படத்தின் நீளம் என பல்வேறு விஷயங்களை பார்வையாளர் புறமிருந்து ஆதங்கத்தோடு பேசுகிறார். படங்களை பெரிதும் விரும்புகின்ற எளிய சராசரி சினிமா விரும்பியின் மனப்புழுக்கங்கள்தான் இவை இதை வாசிக்கும் எவரும் உணர முடியும். படங்கள் தம் மண்சார்ந்த தன்மையை இழந்தது காலத்தின் கட்டாயம்தான். உலகமயமாக்கலின் கால கட்டத்தில் மொழி, கலாச்சாரம், உணவு எல்லாவற்றையும் வணிகமாக்கும் நிறுவனங்கள் கலை குறித்த சிந்தனையில்லாமல் அனைத்தையும் உறிஞ்சி செரித்து செழுமையாகின்றன. பிற மொழி நாட்டு திரைப்படங்களைப் பார்த்து படமெடுத்து தமிழ்ப்பட