இடுகைகள்

கடிதங்கள் 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துயரத்தாரையாக வழிந்தோடும் வாழ்க்கை! - கடிதங்கள்

படம்
  pixabay பிரிய முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  உங்களுக்கும் எனக்குமான அறிமுகம் அந்தளவு ஈர்ப்பானதாக அமையவில்லை. இதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். தங்களின் அறிமுகத்தினால் என்னை நான் புதுப்பித்துக்கொண்டேன். கருத்துகளிலும், ஒரு விஷயத்தை அணுகுவதிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.  தாங்கள் எனக்கு வாசிக்க கொடுத்த புத்தகங்கள் நீண்ட வாழ்வை வாழ்ந்த அயர்வையும், கர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல.  தங்களின் அறிவை, அனுபவத்தை, மகிழ்ச்சியான நேரங்களை என்னோடு பகிர நினைத்ததே பெரிய வரமாக நினைக்கிறேன். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு? அனைத்து நேரங்களிலும் நம் உணர்வை மொழியால் வெளிப்படுத்த முடிவதில்லை. தங்களை மார்புறத் தழுவ நினைக்கிறேன். பல்வேறு வழிகளில் மக்களுக்கு நன்மை கிடைக்க போராடும் உங்கள் போராட்டம் வெற்றி பெற இறையை வேண்டுகிறேன்.  இப்படி எழுதுவது கூட முழுமையாக நான் கூற விரும்புவதை கூறுகிறதா என்று தெரியவில்லை. ஓரளவு உதவுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான் எதைத்தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. முன் ஒரு காலும் பின் ஒரு காலுமாக

நூல் வாசிப்புக்கான நம்பிக்கை முனையம்! - கடிதங்கள்

படம்
  முருகு அண்ணாவிற்கு,  நலமறியவும், நலத்துடன் இருக்கவும் ஆவலும் வேண்டுதலும்.  தற்போது சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது 3வது அத்தியாயம் வரை படித்திருக்கிறேன். தங்களின் கடுமையான பணிநெருக்கடிகளுக்கு இடையில் நிறைய நூல்களை வாசித்து விடுகிறீர்கள். இதுதான் என்னை நூல்களை வாசிக்க செய்யும் நம்பிக்கை முனையம்.  அறச்சலூர் பிரகாஷ் அண்ணன், சில படங்களைக் கொடுத்தார். அதனை நாளொன்றுக்கு ஒருபடம் என முடிவு செய்து பார்த்து வருகிறேன்.  தி குட், தி பேட், அண்ட் தி அக்லி படத்தை நேற்று பார்த்து முடித்தேன். வறட்சியான பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் ஆட்களின் வாழ்க்கைதான் படம். படம் முடியும் வரை யாரெனும் ஒருவர் இன்னொருவரின் தலையிலுள்ள தொப்பி பறக்க சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  பிரிதிவிராஜ் அவர்களின் திருமணத்திற்கு போய் வந்ததை சகோதரர் கூற அறிந்தேன். மணப்பாறை பயணம் எப்படியிருந்தது? பயணம் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத்தரும் என நினைக்கிறேன். புதிய செய்திகளை, மக்களை அறிய பயணம் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? வேலைக்காக ஓபிசி சான்றிதழ் வாங்கும் முயற்சிகளில் இருக்கிறேன். இதற்கு

இரண்டு பேர் இரண்டு பேருடனும் காதல்! - கடிதங்கள்

படம்
  பிரிய முருகுவிற்கு.... நலமுடன் திகழ வேண்டுகிறேன். சேட்டன் பகத்தின் நாவல் ஒன்றைப் படித்தேன். அதுபற்றித்தான் இந்த மடல்.  கோபால் மிஷ்ரா, ராகவ் காஷ்யப், ஆர்த்தி பிரதான் என இரண்டு ஆண், ஒரு பெண் என மூவருக்கு இடையிலான உறவுச்சிக்கல்களும், வாரணாசியின் வளர்ச்சி மாற்றங்களும்தான் கதை. இந்த மூவரில் ஒருவர் இதில் நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க எழுகிறார். அவர் வெற்றி பெற்றாரா, எப்படி வென்றார் என்பதை சேட்டன் பகத்தின் ரிவல்யூஷன் 2020 என்ற நாவல் பேசுகிறது.  நாவலை நீங்கள் வாசிக்கவேண்டியது அவசியம்.  ஒருவரின் புரட்சி குறித்த அறைகூவல் மற்றவரை விழித்தெழச் செய்யலாம. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சமூகத்திற்கு தரவேண்டும். அப்படி பங்களித்தால்தான் சமூகத்திற்கு பல  மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.  இந்த நாவலில் காதல் என்பது முழுக்க ஆர்த்தி என்ற பாத்திரத்தைச் சேர்ந்தது. ஆர்த்திக்கு, ராகவுடன் காதல் இருக்கும்போது கூட விரக்தியடையும் நேரத்தில் கோபாலுடன் உடலுறவு கொள்கிறாள். மில்லினிய கால வாசகர்களுக்கான நாவல் இது.  தற்போது வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம் பூவுலகுதான். வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு படிக்க சென

சலூன் நடத்தியபடியே இலக்கிய சிற்றிதழை நடத்திய மனிதர்! - கடிதங்கள்

படம்
          அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது . பகலில் மட்டுமல்ல இரவிலும் கூட பயங்கரமாக புழுங்குகிறது . கீழே உட்கார்ந்து வேலை செய்வது கடினமாக உள்ளது . தேர்தல் முடிந்தபிறகு ஈரோடு செல்வேன் என்று நினைக்கிறேன் . எழுதுவதற்கான விஷயங்களை மெல்ல திரட்டி வருகிறேன் . படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும் . ஐ யம் அலைவ் என்ற வெப் தொடரை எம்எக்ஸ் பிளேயரில் பார்த்தேன் . தமிழில் பார்க்க முடியும் . புனைவு கலந்த தொடர் . போலீஸ்கார தந்தை குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் . தனது இரண்டு பெண்களின் மீதும் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார் . சீரியல் கொலைகாரன் ஒருவனை பிடிக்கப் போகும்போது , அவரது சகா உதவிக்கு வர மறுத்து சூதாட்டத்திற்கு சென்றுவிடுகிறார் . அவனை பிடிக்கும் நினைக்கும்போது , எதிராளியின் தாக்குதலில் இறந்துபோய் விடுகிறார் . இறந்த போலீஸ்காரருக்கு திரும்ப உலகிற்கு வர வாய்ப்பு கிடைக்கிறது . போலீஸ்காரராக இருக்கும் மற்றொரு மனிதரின் உடலில் ஆன்மா புகுகிறது . இவரும் வேலை பார்ப்பது , இறந்த போலீஸ்காரரின் பெண் டிடெக்டிவாக உள்