இடுகைகள்

ஆங்கில வார்த்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் சொற்களை அறிந்துகொள்வோம்!

படம்
  சூழல் சொற்கள் பயோஃப்யூல்ஸ் (Biofuels) தாவரத்திலிருந்து பெறும் திரவ அல்லது வாயு வடிவ எரிபொருள். எடு.மரம், மரக்கழிவுகள், விவசாயக் கழிவுகள், திடக்கழிவுகள், எத்தனால் கலந்த எரிபொருட்கள்  பயோஜியோகெமிக்கல் சைக்கிள் (Biogeochemical Cycle) பூமியின் இயக்கத்திற்கு பங்களிக்கும் வேதிப்பொருட்களின் சுழற்சி. கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ் ஆகியவை இந்தவகையில் முக்கியமான வேதிப்பொருட்களாகும்.  பயோமாஸ் (Biomass) உயிரின பல்திரள் அளவு. இயற்கையில் இருந்து கிடைக்கும் உயிருடன் அல்லது உயிரற்ற பொருட்கள் என கூறலாம். எடு.மரம், பயிர்கள், விலங்கு, விலங்கு கழிவுகள் பயோஸ்பியர் (Biosphere) உயிர்க்கோளம். பூமியில் உள்ள அனைத்து சூழல் மற்றும் உயிரினங்களை உள்ளடக்கிய தொகுதி. எ.டு.நிலம், கடல் சார்ந்து வாழும் உயிரினங்கள்.   பிளாக் கார்பன் ஏரோசோல் (Black Carbon Aerosol) கரிம எரிபொருட்கள், உயிரி எரிபொருட்கள்  ஆகியவற்றின் மூலம் வெளியாகி, சூரிய ஒளியை ஈர்க்கும் கார்பன் துகள்கள்.