பாசிசத்திற்கு காவல்துறை, ஊடகம், நீதித்துறை என அனைவருமே ஆதரவாக உடந்தையாக நிற்கிறார்கள் - எழுத்தாளர் ஆல்பா ஷா
நேர்காணல் எழுத்தாளர் ஆல்பா ஷா மானுடவியல் பேராசிரியரான ஆல்பா ஷா, அண்மையில் தி இன்கார்செரேஷன்ஸ் - பீமா கோரேகன் அண்ட் தி சர்ச் ஃபார் டெமாக்ரசி இன் இந்தியா என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் சுதந்திர சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பேசியும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இந்த நூலை எழுதுவதற்கு தூண்டியது எது? பீமா கோரேகன் வழக்கு, இந்தியாவில் ஜனநாயகம் சிதைந்துவிட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடிய சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட ஆட்களையும் சந்தித்து பேசினேன். அவர்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கானது என நம்புகிறேன். பொருளாதாரம், அரசியல், கலாசாரம் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதற்கான போராட்டம் அவர்களுடையது. இப்படி செயல்படுபவர்களை அச்சுறுத்த ஜனநாயகத்தின் தூண்கள் என நம்பப்பட்ட ஊடகம், நீதித்துறை, காவல்துறை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது நீதான் என பட்டியலிடப்பட்டு செயல்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். தெருவில் படுகொலை கும்பல்கள் சுற்றுகிறார்கள் என்றால், இண...