இடுகைகள்

பிலிப்பைன்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திரமான பேச்சுரிமையை வலியுறுத்திய பத்திரிகையாளர்களுக்கு நோபல் விருது!

படம்
  பத்திரிகையாளர்கள் மரியா ரெஸா, டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப்பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற ஆட்சி முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.  சுதந்திரமான பேச்சுரிமைக்காக பாடுபட்டதற்காக மேற்சொன்ன பத்திரிகையாளர்களுக்கு அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி கூறியுள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் பிற பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியானவர்கள். இவர்கள் ஜனநாயகத்தையும் அதன் மதிப்பையும் காக்க உழைத்துள்ளனர் என இந்த அமைப்பு இதுபற்றிய அறிவிப்பில் கூறியுள்ளது.   மரியா ரெஸா, 2012ஆம் ஆண்டு ராப்ளர் எனும் இணையதளத்தைத் தொடங்கினார். இதில் பிலிப்பைன்ஸ் அதிபர் டூடெர்டேவின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு செய்திகளை இணையத்தளத்தில் வெளியிட்டார். 2018ஆம் ஆண்டிற்கான மனிதராக இவரை அமெரிக்காவின் டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது.  முரடோவ், 1993ஆம் ஆண்டு ரஷ்யாவில் நோவாயா கெசட்டா எனும் சுதந்திரமான பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். இந்த பத்திரிக்கை அதிகாரத்தை கேள்வி கேட்கும் வகையில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வர