இடுகைகள்

பாரம்பரியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொன்மையான இடங்களைக் கொண்ட கோட்டார்!

படம்
  கோட்டார் அமைந்துள்ள இடம் மான்டெனெக்ரோ குடியரசு கலாசார இடமாக அறியப்பட்ட ஆண்டு 1979 என்ன செய்யலாம் கடல் பகுதியில் படகு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஜாலியாக டூர் செல்லலாம்   கோட்டார், அட்ரியாடிக் கடல்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகம் அமைந்துள்ள பகுதி நீங்கள் கனவில் காணும் காட்சி போல அழகாக அமைந்துள்ளதுதான் சிறப்பானது. நீர்பரப்பு அதற்கு அருகில் உயர்ந்துள்ள மலைப்பகுதிகள் என பார்க்க பிரமிக்க வைக்கும் காட்சிகளை இங்கு காணலாம். ரோமன் கால கட்டிடங்கள், அகலமான சாலைகள், மத்திய காலகட்டத்தில் கட்டப்பட்ட சுவர்கள், தேவாலயங்கள் என பார்த்து வியப்பு கொள்ள மகிழ நிறைய இடங்கள் உள்ளன. கோட்டார் பகுதி, பதினைந்தாம், பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியின் பரப்பு, 14,600 சதுர கிலோமீட்டராகும். இந்தியாவில் தொன்மையான இடங்களை பாதுகாக்கிறோம் என சங்கர் சிமெண்டை குலைத்து பூசுவார்கள் அல்லவா, அந்த மாதிரி இல்லாமல் உண்மையாகவே தங்களது பாரம்பரிய இடங்களை பாதுகாக்க மெனக்கெடுகிறது அரசு. நகரத்தின் முக்கியமான கட்டிடங்களை சிறப்பாக மறு புனரமைப்பு செய்து பாதுகாக்கிறார்கள். கோட்டார் கடற்புறம் மட்டுமல்லாது அதன்

காதலித்த வெளிநாட்டு காதலன் அக்காவின் கணவரா? - பாவாகாரு பாகுன்னாரா - சிரஞ்சீவி, ரம்பா

படம்
                  பாவகாரு பாகுன்னாரா சிரஞ்சீவி, ரம்பா, பிரம்மானந்தம், பரேஷ் ராவல் இயக்குநர் ஜெயந்த் பானர்ஜி இசை மணி சர்மா வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் கதையை எடுத்து தட்டி டிங்கரிங் பார்த்து நம்மூருக்கான மசாலாக்களை சற்று ஜாஸ்தியாக சேர்த்தால் பாவா பாகுன்னாரா படம் தயார். கதை தொடங்குவது வெளிநாடு ஒன்றில்தான். அதாவது நியூசிலாந்து. அங்குதான் ரம்பா படித்துக்கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டார் என அவரது தோழன் புகார் செய்ய, அப்படியா என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடித்து உதைக்க கிளம்புகிறார் ரம்பா. அதாவது சொப்னா. அவர் அடித்து கை, காலை முறிக்க வேண்டுமென கூறியது ராஜூ என்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவிதான். அவர் அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வரு 1,280 × 720 கிறார் கூடவே இந்தியாவில் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறார். அறம் செய்யவும் பொருள் வேண்டுமே? அதற்குத்தான் ஹோட்டல் தொழில்..  இந்த சூழலில் சொப்னாவுக்கு ராஜூவுக்கும் காதல் வருகிறது. ராஜூ நான் இந்தியாவுக்கு போய்விட்டு வருகிறேன் என கிளம்பிவிடுகிறார். அங்கு வந்து அனாதை ஆசிரம வேலைகளை முடித்துவிட்டு பார்த்த

நெஞ்சின் ஓரமாய் வலி! - குடும்ப நோய் வரலாறு காரணமா?

படம்
  இதயநோய் ஏற்படுபவர்களின் குடும்ப வரலாற்றை முன்னதாக அறிந்தால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என லான்செட்  அக்.2021 இதழின் ஆய்வு கூறியுள்ளது.  கேரளத்தில் 750 குடும்பங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இதயநோய் தொடர்பான பாதிப்பு கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்தனர். இவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தேவை என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  ஐம்பத்தைந்து வயதுக்கு முன்னதாகவே ஒருவருக்கு இதயநோய் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது என கண்டுபிடிப்பது அவசியம். அப்படி கண்டுபிடித்தால், அவருக்குள்ள 1.5 முதல் 7 சதவீத ஆபத்தை தவிர்க்க முடியும் என லான்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது.  இந்த ஆய்வு கேரளத்தில் 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்டது.  சுகாதார பணியாளர்கள் 368 குடும்பங்களைச் சந்தித்தனர். அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்தனர். மேலும் அவர்களின் உணவுமுறையை மாற்றியமைக்கவும் அறிவுறுத்தினர். உடற்பயிற்சி செய்யவும், மது, புகையிலையை பயன்படுத்துவதை கைவிடவும் கூறினர்

அறிவியலில் இனவேற்றுமை காட்டும் இங்கிலாந்து! - எழுத்தாளர் ஏஞ்சலா சைனி

படம்
என் முன்னோர்கள் என்பவர்கள் என் பெற்றோர்கள் மட்டுமே! நேர்காணல் ஏஞ்சலா சைனி இந்தியாவை பூர்விகமாக கொண்ட அறிவியல் எழுத்தாளர். இங்கிலாந்தில் வாழும் இவர், அங்கு அறிவியல் துறையில் நிகழும் இனரீதியான பல்வேறு பிர்சனைகளை தான் எழுதியுள்ள புதிய நூலான சுப்பீரியர் தி ரிடர்ன் ஆப் தி ரேஸ் சயின்ஸில் கூறியுள்ளார். நீங்கள் ஒரு இந்தியர் என்பதால் இனவெறுப்பை சந்தித்திருக்கிறீர்களா? நான் பள்ளியில் படிக்கும்போது இனவெறுப்பு சம்பவங்களைச் சந்தித்துள்ளேன். இங்கு இனவெறுப்பு என்பது சாதாரண பேச்சுகளிலிருந்து தொடங்குகிறது. நான் லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் வசிக்கிறேன். இங்கு அனைத்து வித மக்களும் வாழ்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. நீங்கள் இந்த நூலை எழுவதற்கான காரணம் என்ன?  1930 களில் ஜெர்மன் நாஜிகள், ஆரியர்களின் இனத்தூய்மை என்ற வாத த்தை கையில் எடுத்தனர். இன்று உலகம் அதே வழியில் பயணித்து வருகிறது. வலது சாரி பாபுலிச அரசுகள் தங்களது அரசியல் வெற்றிக்காக அனைத்து துறைகளிலும் இனவாதத்தை தூண்டி வருகின்றனர். உயிரியல் அடிப்படையில் அறிவியல் அமைப்புகளிலும் இனவாதம் புகுந்துள்ளதை விளக்கவே இந்