இடுகைகள்

ரோபஸ்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காபி பயிரில் புதிய வகை - எக்ஸெல்சா

படம்
  எக்ஸெல்சா காபி செடி காபியில் புதிய ரகம்! காபி ரகங்களைப் பொறுத்தவரை இரண்டு வகைகள்தான் அனைவரும் அறிந்தவை. அராபிகா, ரோபஸ்டா. இந்த இரண்டு வகை காபிகளைத்தான் ஒருவர் அருந்தியிருக்க முடியும். இதிலும் நிறையப் பேர் குறிப்பிட்ட வகை காபிக் கொட்டைகளை வாங்கி வறுத்து பொடி செய்வது உண்டு. இல்லையெனில் குமார் காபி, குரு காபி, நரசுஸ் காபி, லியோ காபி என காபி நிறுவனங்களில் கூட வாங்கிக்கொண்டு காபி போட்டு குடிப்பார்கள். உலகளவில் அராபிகா, ரோபஸ்டா என்பவைதான் பிரபலமானவை. ஆனால், இந வகை காபி செடிகளை பயிரிடுவதில் நோய்த்தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் இதன் ஆண்டு விளைச்சலும் குறைந்து வருகிறது. இதன் விளைவாக வேறு காபி ரகங்களை தேடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. காபி   பயிரில் மொத்தம் 124 இனங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் வணிகரீதியாக வளர்த்து அதைப் பயன்படுத்தும் காபி கொட்டைகளுக்கு ஏற்றவை என வணிகர்கள் அராபிகா, ரோபஸ்டா என இரண்டை மட்டுமே ஏற்றனர். அதை மட்டுமே விளைவித்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், இனி அவற்றை பயன்படுத்துவதில் அதிக பயனில்லை. மேற்சொன்ன இரண்டு ரகங்களுக்குப் பதில் எதிர்காலத்தில் லைபீரியா என்ற காபி