இடுகைகள்

கால்பந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேகன் ராபினோ - பெண்களுக்கான உரிமைப் போராளி

படம்
  மேகன் ராபினோ - கால்பந்து உலகின் கலகத் தலைவி மேகன் ராபினோ மேகன் ராபினோ தனது இணையரான சூ பேர்டுடன்... மேகன் ராபினோ – கால்பந்து உலகின் உரிமைப் போராளி   பெண்கள் கால்பந்துபோட்டிகளை ஆக்ரோஷமானதாக மாற்றி அதை லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும்படி செய்த அமெரிக்க விளையாட்டு வீரர்களில் முக்கியமானவர் மேகன் ராபினோ. இவரது தந்தை கட்டடங்களை கட்டித்தரும் ஒப்பந்ததாரர். அம்மா, ஹோட்டல் ஒன்றில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ராபினோவுக்கு, அவருடன் பிறந்த இரட்டையரான சகோதரி ஒருவர் உண்டு. தற்போது 38 வயதாகும் மேகன் ராபினோ, இளம் வீரர்களுக்கு முன்மாதிரியான வீரர்.   ஐந்து அடி ஏழு அங்குலம்   உள்ள இவர், பெண்களுக்கு சம ஊதியம், பால்புதுமையினருக்கு விளையாட்டு அணியில் விளையாட உரிமை ஆகியவற்றை கேட்டு போராடி வருகிற போராளி. டச் மோர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சூ பேர்ட் என்ற தனது காதலருடன் இணைந்து தொடங்கி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் ராபினோவுக்கு பெண்கள் மத்தியில் பெரும் மரியாதை உண்டு. அதை அவர் களத்திலும் களத்திற்கு வெளியிலும் சம்பாதித்துக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.   2019ஆம் ஆண்டு அமெரிக்க பெண்கள் கால்பந்து

உலக கோப்பை பந்துகள் - அடிடாஸ் தயாரித்து வழங்கும் கால்பந்துகளின் தன்மை

படம்
  உலகப்கோப்பை பந்துகளின் வரலாறு பிபா அமைப்பு நடத்தும உலக கோப்பை கால்பந்து முக்கியமான போட்டி. இந்தியாவில் பெரும்பான்மையாக கிரிக்கெட்டிற்கு ஆதரவு இருந்தாலும் கூட முக்கியமான நகரங்களில் கால்பந்துக்கும் ஆதரவான ரசிகர்கள் கூட்டம் உண்டு. வடகிழக்கு இந்தியாவில் கால்பந்திற்கென வெறிகொண்ட ஆட்டக்காரர்களும், ரசிகர்களும் உண்டு. இங்கு நாம் பார்க்கப் போவது கால்பந்துகளைப் பற்றித்தான். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அல் ரிஹ்லா என்ற பெயரில் கால்பந்து அறிமுகமாகியுள்ளது. அல் ரிஹ்லா என்ற அரபி மொழி சொல்லுக்கு பயணம் என்று பொருள். இபின் பத்துதா என்பவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பல நாடுகளுக்கு சுற்றினார். டெல்லியில் உள்ள மன்னர் முகமது பின் துக்ளக்கையும் சந்தித்தவர். பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மை, சூழலுக்கு உகந்தது. நீரை அடிப்படையாக கொண்டது. கத்தாரின் கலாசாரத்தை மையமாக கொண்டு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பாலியூரெத்தின் வேதிப்பொருள் மூலம் கால்பந்து உருவாக்ககப்பட்டுள்ளது. இதில் வேகம், துல்லியம், காற்று அழுத

சர்ச்சை பிளஸ் சாகசம் = மாரடோனா!

படம்
              தங்கச் சிறுவன் மாரடோனா ! அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா 60 வயதில் மாரடைப்பால் காலமானார் . 1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலகப்கோப்பை பெற்றுத்தந்த வீரர் என மாரடோனா புகழப்படுகிறார் . இப்போட்டியில் காலிறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஹேண்ட் ஆப் காட் கோல் முறை அனைத்து ஊடகங்களிலும் புகழப்பட்டு , நூற்றாண்டிற்கான கோல் என வரலாற்றில் இடம்பிடித்தது . இதுதொடர்பாக உருவான ஆவணப்படத்தில் அந்த கோல் , ஃபாக்லாந்து போரில் இங்கிலாந்து பெற்ற வெற்றிக்கான பழிவாங்கல் என்று குறிப்பிட்டார் மாரடோனா . கால்பந்து மைதானத்திலும் , நிஜ வாழ்க்கையிலும் கலககாரராக மாரடோனா இருந்தார் . மாஃபியா குழுக்களோடு தொடர்பு , பெண்களிடம் அதீத ஈர்ப்பு , கோகைன் , மதுபானம் ஆகியவற்றின் மீதான பிரியம் எப்போதும் ஊடக வெளிச்சம் இவர்மீது படும்படியாகவே வாழ்ந்தார் . மாரடோனாவுக்கு நான்கு மனைவிகள் மூலம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர் . ப்யூனோ ஏர்ஸின் வெளிப்புறத்தில் வில்லா டேவடோ என்ற இடத்தில் மாரடோனா வளர்ந்தார் . வறுமையான சூழலில் மூன்று வயதில் கால்பந்தை பரிசாக பெற்றார் . கால்பந்து விளை

இணையத்தில் விளையாட்டு! - டேட்டா கார்னர்.

படம்
    ட்ரீம்11       இந்தியாவில் 75 சதவீதம் பேர் இணையத்தில் உள்ள ஃபேன்டசி விளையாட்டுக்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை விளையாடுகின்றனர். இதில் 20% பேர் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை விளையாடுகின்றனர்.   85 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் ஆப் வழியாகத்தான் விளையாடுகின்றனர்.  வாரத்திற்கு மூன்று முறை விளையாடுபவர்களின் வயது 18-24, 25-36 என்ற வரம்பிற்குள் உள்ளது. 37-50 வயது கொண்டவர்கள் வாரத்திற்கு ஐந்துமுறைக்கும மேல் விளையா டுகிறார்கள்.  சாகசம் மற்றும் பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறோம்  என விளையாடுபவர்களில் 72 சதவீதம் பேர் சொல்லியிருக்கின்றனர்.  இணைய விளையாட்டுகளிலும் கோப்பை வென்று முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட்தான். 71 சதவீதம் பேர் போனிலும் கிரிக்கெட்தான் விளையாடுகிறார்கள். 54  சதவீதம்பேர் கால்பந்து விளையாடுகிறார்கள். பேஸ்கட்பால், ஹாக்கி எல்லாம் கடைசி பெஞ்சுக்கு சென்றுவிட்டன.  ஐபிஎல்லில் சம்பாதித்து அந்த அணிக்கே ஜெர்சி ஸ்பான்சர் ஆகும் சாதனை செய்த ட்ரீம்11தான் 60 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. இதற்குப்பிறகு ப்ரீமியர் லீக் கால்பந்து, இங்க்லீஸ் ப்ரீமியர் லீக், ஐபிஎல் ஆகிய

தலையில் பந்தை முட்டினால் நினைவிழப்பு குறைபாடு ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கால்பந்தை தலையில் முட்டி விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அப்படி விளையாடுவதை ஆபத்து என்கிறார்களே? ஸ்காட்லாந்து நாட்டில் பன்னிரண்டுக்கு வயதுக்கு குறைவான சிறுவர்கள் கால்பந்தை தலையில் முட்டி விளையாடக்கூடாது என்று தடை விதிக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம், தலையில் முட்டி விளையாடும்போது, மூளை பாதிக்கப்பட்டு டிமென்ஷியா எனும் நினைவிழப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஆஸ்டில் ஃபிபா கோப்பையில் பங்கேற்றவர். இவர் விளையாட்டில் ஏற்பட்ட காயங்களால், 59 வயதில் தன் மகளின் வீட்டில் இறந்துபோனார். இவரின் தலையை ஆராய்ச்சி செய்தபோது, குத்துச்சண்டை வீர ர்களுக்கு தலையில் ஏற்படும் சிடிஇ எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். காரணம், கால்பந்து விளையாட்டில் வேகமாக வரும் வந்தை தலையில் முட்டி கோல் அடிப்பதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரண மக்களை விட கால்பந்து வீரர்கள் 3.5 மடங்கு டிமென்சியா குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. டாக்டர் வில்லி ஸ்டீவர்ட் என்பவர்

விளையாட்டிற்கு பெருநிறுவனங்கள் உதவ வேண்டும் - கிரண் ரிஜ்ஜூ

படம்
நேர்காணல்  கிரண் ரிஜ்ஜூ விளையாட்டுத்துறை அமைச்சர் அடுத்த ஆண்டு பெண்கள் உலக கால்பந்து போட்டியையும் ஒலிம்பிக் போட்டியையும் நடத்தும் பொறுப்பு கிரணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் இத்துறைக்கு பொறுப்பேற்று நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் விளையாட்டுத்துறையை மேம்படுத்த என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேட்டோம். இந்தியா விளையாட்டுத்துறையில் முன்னேற என்ன செய்யவேண்டும்?  விளையாட்டுத்துறையில் இந்தியா வெகுவாகத் தடுமாறி வருகிறதே? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் காலனியிலும் விளையாட்டுக்கான மைதானங்கள் தேவை. துரதிர்ஷ்டம் என்னவென்றால், நம்மிடம் இடம் கிடையாது.  இதனை மும்பையில் நீங்கள் பார்க்கலாம். இதற்கு பெருநிறுவனங்கள் நிதி அளித்து உதவ வேண்டும்.  கர்நாடக மாவட்டத்திலுள்ள பெல்லாரியில் ஜேஎஸ்டபிள்யூ நிறவனத்தில் விளையாட்டுக் கழகத்தைப் பார்வையிட்டேன். பிரமாதமான வசதிகளைக் கொண்டுள்ளது. எனது எதிர்பார்ப்பு அதுபோன்ற வசதிகள் கொண்ட மையம்தான். இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து மட்டுமே விளையாட

விளையாட்டுகளுக்கான ஆப்ஸ்! - சக்கர வியூகம் வகுக்கும் ஆப்ஸ்!

படம்
டாக்டிகல் பேட் என்பிஏ ஏஆர் பேஸ்கட் பால் பேஸ்கட் பால் விளையாட்டை மெய்நிகர் உலகில் விளையாடினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த ஆப்பின் விசேசம். இதோடு இன்னும் நிறைய விளையாட்டுகள் உள்ளன. இன்ஸ்டால் பண்ணி இன்பமாக விளையாடுங்கள். நைக் டிரெய்னிங் கிளப் நைக் கம்பெனியின் உடற்பயிற்சி வல்லுநர்கள் உங்களுக்கு வழிகாட்டி ஆரோக்கியத்தை வழங்குகிறார்கள். அதாவது உடற்பயிற்சிக்கான டிப்ஸ்களை. இதில் விளையாட்டுகளில் புகழ்பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றோரும் உண்டு. டாக்டிகல் பேட் கால்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கான சக்கர வியூகங்களை இதன் மூலம் வகுக்கலாம். கௌரவர்களை நாசூக்காக தந்திரமாக வீழ்த்தி ஆரவாரம் செய்யலாம். அதற்கான்ன அத்தனை அம்சங்களையும் இந்த ஆப் கொண்டிருக்கிறது.