விளையாட்டிற்கு பெருநிறுவனங்கள் உதவ வேண்டும் - கிரண் ரிஜ்ஜூ



Image result for kiren rijiju




நேர்காணல் 

கிரண் ரிஜ்ஜூ

விளையாட்டுத்துறை அமைச்சர்

அடுத்த ஆண்டு பெண்கள் உலக கால்பந்து போட்டியையும் ஒலிம்பிக் போட்டியையும் நடத்தும் பொறுப்பு கிரணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் இத்துறைக்கு பொறுப்பேற்று நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் விளையாட்டுத்துறையை மேம்படுத்த என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேட்டோம்.

இந்தியா விளையாட்டுத்துறையில் முன்னேற என்ன செய்யவேண்டும்?  விளையாட்டுத்துறையில் இந்தியா வெகுவாகத் தடுமாறி வருகிறதே?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் காலனியிலும் விளையாட்டுக்கான மைதானங்கள் தேவை. துரதிர்ஷ்டம் என்னவென்றால், நம்மிடம் இடம் கிடையாது.  இதனை மும்பையில் நீங்கள் பார்க்கலாம். இதற்கு பெருநிறுவனங்கள் நிதி அளித்து உதவ வேண்டும்.

 கர்நாடக மாவட்டத்திலுள்ள பெல்லாரியில் ஜேஎஸ்டபிள்யூ நிறவனத்தில் விளையாட்டுக் கழகத்தைப் பார்வையிட்டேன். பிரமாதமான வசதிகளைக் கொண்டுள்ளது. எனது எதிர்பார்ப்பு அதுபோன்ற வசதிகள் கொண்ட மையம்தான்.

இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து மட்டுமே விளையாடப்படுகிறது. ஆனால் மாணவர்கள் பலரும் வெவ்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்களே? 

அதற்காகத்தானே கேலோ இந்தியா திட்டம் உருவாக்கினோம். இதில் 17-21 வரையிலான இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறோம்.  விளையாட்டு வீரர்களை உருவாக்க பணப்பரிசுகளை வழங்கவும் முயற்சித்து வருகிறோம்.
2013 ஆம் ஆண்டு அறிவித்த பணப்பரிசுகள் இன்றும் வழங்காமல் உள்ள நிலையை அறிந்து அதனை சீர்செய்ய முயற்சித்து வருகிறேன். விளையாட்டில் வென்றவர்கள் டெல்லியில் வந்திறங்கும்போதே அவர்களுக்கு பணப்பரிசுகளை அளிக்கும் நடைமுறையை கொண்டுவர நான் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

வீரர்களை சோதனையிடும் தேசிய பரிசோதனை ஆய்வகம் தடை செய்யப்பட்டுள்ளதே என்ன பிரச்னை?

இதில் நிறைய பிரச்னைகள் உள்ளன. இங்கு கடைபிடிக்கப்படும் சோதனை முறைகள் மிகவும் சிக்கலானவை. இதில் நேரும் முரண்பாடுகள் விளையாட்டு வீரரின் வாழ்க்கையை குலைத்து விடும். நான் ஆய்வகத்திலுள்ள மூத்த அறிவியலாளர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் கூறிய கருத்துகளைக் கேட்டேன். உலகத்தரமான விதிகளைப் பின்பற்றி இழந்த அங்கீகாரத்தை மீட்போம்.

விளையாட்டுத்துறைக்கு எப்படி பட்ஜெட் ஒதுக்கீடு இருக்கும்?

தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். இதற்கு பெருநிறுவனங்களின் உதவியைத்தான் நம்பியிருக்கிறோம். காரணம், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு உதவும் வெளிநாட்டு பயிற்சியாளர்களின் மாத சம்பளம் 10-15 லட்சங்கள் வரை வருகிறது. விளையாட்டுகளை வளர்க்க நிறுவனங்களின் நிதியுதவி தேவைப்படுகிறது.

வருமானத்திற்காக ஏன் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க கூடாது?

(சிரிக்கிறார்). நம் இந்தியாவின் சமூக கலாசாரம் வேறுபட்டது. வருமானத்திற்கான வழி என்பதாக நான் பெட்டிங்கை கருதவில்லை. என்னுடைய வழிமுறை வேறானது.

நன்றி-டைம்ஸ்

பிரபலமான இடுகைகள்