புத்தரை நிர்மாணிக்கும் ஆப்கன் அரசு- கலாசார மறுமலர்ச்சி!




scared news GIF



மீண்டும் புத்தர்!

2001 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட புத்தரின் சிலைகள் ,தற்போது அமெரிக்க அரசின் உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ”புத்தரின் சிலைகளைச் சீரமைப்பதன் மூலம் எங்கள் கலாசாரத்தை மீட்கிறோம்” என்கிறார் அருங்காட்சியக மியூசிய இயக்குநரான மொகமத் ரஹிமி.


மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்!

கேரளத்தின் திருவனந்தப்புரத்தில் துணை ஆட்சியராக பார்வைத்திறன் அற்ற பிரஞ்சல் பாடீல் பதவி ஏற்றிருக்கிறார். மகாராஷ்டிரத்தைச்சேர்ந்த இவர் 2016 இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதி வென்றவர். சமூகநீதித்துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றவுள்ள பிரஞ்சல், இந்தியாவின் முதல் பார்வைத்திறன் அற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.



நிலவில் இங்கிலாந்து!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பேஸ்பிட் எனும் நிறுவனம், 2021இல் நிலவிற்கு ரோவரை கொண்டு செல்ல உள்ளது.  விண்வெளிக்கு 1.3 கி.கி. எடைகொண்ட ரோவரை ஆஸ்ட்ரோபாடிக்  நிறுவன லேண்டர் கொண்டு செல்லும். அறிவியல் நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூறியுள்ளார் ஸ்பேஸ்பிட் நிறுவனத் தலைவரான பாவ்லோ தனாஸ்யுக்.


மின் சிக்கனம்!

பஞ்சாபில் மின்சார வாரியம் மின்சாரத்தையும், நீரையும் சிக்கனமாக பயன்படுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சாதித்திருக்கிறது. ’பானி பச்சாவோ, பைசா கமாவோ’எனும் இத்திட்டத்தில் இணைந்த விவசாயிகள் 2.17 லட்சம் மின் யூனிட்டுகளை சேமித்து 8.69 லட்ச ரூபாயை ஊக்கத்தொகையாக பெற்றுள்ளனர். 


பிரபலமான இடுகைகள்