நாய்களை எப்படி புரிந்துகொள்வது? - உடல்மொழி, செய்கைகள்!
டாக்டர். எக்ஸ்
நாய்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகளாக நம்மோடு இருக்கும் ஜீவன்களை இன்னும் வாய்பேசாத முடியாத ஆட்களைப் போலவே நடத்துகிறோம். நாய் வாலாட்டினால் உடனே சோற்றுத்தட்டை இழுத்து வைத்துவிட்டு செல்வது தவிர்த்து அதன் தேவை பற்றி நாம் அறிந்தது மிக குறைவு.
நாய்கள் நக்குவதற்கு என்ன காரணம்?
நாய்கள் தங்களின் தாயையும், எஜமானர்களையும் ஏன் அடிக்கடி பாசமாக பளிச் சென நக்குகின்றன. பாசத்தைக் காட்டுவதற்கும், கவனத்தை ஈர்க்கவும்தான். எனக்கு இப்படித்தான் இரவு நேரத்தில் எங்கள் வீட்டு நாய் விசுவாசம் காட்ட, சுரீர் என முதுகுத்தண்டில் குளிர் ஊடுருவியது போன்று இருந்தது. அட கருமம் புடிச்ச நாயே என்று கத்திய பின்தான் எனக்கு ஆத்திரம் தீர்ந்தது. இதுபோன்ற கோபத்தையும் நான் குறைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.
பொதுவாக நாய்கள் எஜமானரின் உடலை நக்குவது அவற்றின் மனச்சோர்வினை போக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். தங்களின் உடலை நக்குவது, சலிப்பு அல்லது உடல் நோய் காரணம் என்று கூறுகிறார்கள்.
இடம்பார்த்து படுப்பது
நாய்கள் ஓரிடத்தைக் கண்டதும் படுக்காது. அந்த இடத்தைப் பார்த்து, கால்களை சுரண்டி குறிப்பிட்ட பூச்சி, பொட்டு இருக்கிறதா என்று பார்த்துதான் படுக்கும். சுருண்டு படுத்தாலும் சரி, உடனே எந்திரிக்கும் படி அல்லது இடது வலது என சாய்ந்து படுத்தாலும் சரி. இப்பழக்கம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம. உறங்கும் இடம் சரியாக இருக்கவேண்டும் நாய்கள் விரும்புகின்றன.
கார்களில் தனியாக நாய்கள்!
கார்களில் நாய்களைக் கூட்டிச்சென்றுவிட்டு அவற்றைத் தனியாக விட்டுவிட்டு செல்லக்கூடாது. காரணம், பாசம், அன்பு என்பதற்காக அல்ல. அவற்றின் உடல் வேகமாக சூடாகும். இதனால் அவற்றை முடிந்தளவு திறந்தவெளி கார்களில் வைத்திருப்பது நல்லது.
காலமெல்லாம் குழந்தைதான்!
நாய்கள் அப்படித்தான். நாய்கள் இரண்டு வயது குழந்தையின் புத்திசாலித்தனத்துடன் இருக்கும் 250 வார்த்தைகளை உணவை லஞ்சமாக கொடுத்து சொல்லி தந்தால் புரிந்துகொள்ளும். உடல் மொழியையும் அவை அறியும்.
ஈரமான கறுப்பு மூக்கு!
நாய்களின் ஈரமான மூக்கு அதன் உடல் வெப்பத்தை சரியானபடி வெளியேற்றுகிறது என்பதற்கான அடையாளம்தான். இதற்கும் அதன் சரியான உடல்நலத்திற்கும் எந்த தொடர்புமில்லை. அதன் மூக்கிலுள்ள திரவம் வெப்பத்தைக் குறைப்பதற்கான விஷயங்களைச் செய்கிறது.
நன்றி - மென்டல் ஃபிளாஸ்யா