செக்ஸைப் பற்றிப் பேசுவது தவறு கிடையாது! - சேட்டன் பகத்



Erotic, Pair, Drawing, Art, Painting, Love, Sex, Naked
pixabay.com


செக்ஸைப் பற்றி பேசுவது தவறு அல்ல!

நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களில் எத்தனைபேர் பகிரங்கமாக செக்ஸைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அல்லது அதன் பிரச்னைகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறீர்கள். எனக்கு தெரிந்து இந்தியாவில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவேயில்லை.

நான் அண்மையில் நூல் ஒன்றில் ஒரு சம்பவத்தை படித்தேன். திருமணமான தம்பதிகளின் முதலிரவு அது. அன்று ஆண் சொர்க்க கதவை எவ்வளவோ முட்டிப் பார்த்ததும் திறக்கவில்லை. பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை. அடுத்த வாரம் செக்ஸாலஜிஸ்டை அணுகுகிறார்கள். அவரிடம் பேசியபோதுதான் கணவருக்கு தெரிந்திருக்கிறது. தான் சாவி போட்டு திறக்கவேண்டிய பூட்டு தான் முயற்சித்த கதவுக்கு கீழிறக்கிறது என்று. அவர் பெண்ணின் சிறுநீர் துவாரத்தில் தன் ஆண்குறியை திணிக்க முயல, பெண் வலியில் அலறி துயரமான தேனிலவாக முடிந்திருக்கிறது அவர்களின் கல்யாண ராத்திரி.

Drawing, Naked, Pair, Erotic, Woman, Female, Body
pixabay.com

பெண்களைத் திரும்பி பார்க்காமல் மண்ணைப் பார்த்து நடந்து கற்பை காப்பாற்றி, கல்யாண பந்தத்தில் நுழைந்தால் இப்படித்தான். காரணம், வன்முறையை வெளிப்படையாக காட்டத்தெரிந்த நமக்கு காதலை, அன்பை, காமத்தை சரியாக கூறத்தெரியாத சோகம் அவலமாக இருக்கிறது.

இத்தனைக்கும் பாருங்கள். காதல், திருமணம், பொதுவாழ்க்கை, தர்ம ம் பற்றிய விளக்கம் கொடுத்த வாத்சாயனாரின் வழியில் வந்தவர்கள்தான் நாம் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. எங்கிருந்து நாம் பாலியல் பற்றி பேசுவது தவறு என உணரத்தொடங்கினோம். மொகலாயர்களின் ஆட்சி வட இந்தியப் பகுதிகளில் இருந்தபோது இதுபோன்ற கலாசாரம் தொடங்கியிருக்கலாம். இது ஒரு யூகம்தான். பிராமணர்களின் பங்கும் இதில் உள்ளது.

ஆண், பெண் உடலமைப்பில் இருக்கும் வேறுபாடு கூட ஒருவருக்கு தெரியவில்லை என்றால் அவரது திருமண வாழ்க்கை எப்படிஇருக்கும் பாருங்கள்? முட்ட வேண்டிய இடத்தில் முட்டினால்தானே அமிர்தம் கிடைக்கும். தவறான முயற்சிகள் வலியைத்தானே தரும்?

கல்யாணம், சந்தோஷம் கடந்து பாலியல் கல்வி என்பது நம் குழந்தைகளுக்கு அவசியம். இதன்மூலம் வரும் பாலியல்ரீதியான தொற்றுநோய்கள் பற்றிக்கூட விழிப்புணர்வின்றி இருக்கிறார்கள் நம்மவர்கள். 1960களில் மாலா டி என்ற கருத்தடை மாத்திரைகளை அரசு மக்களுக்கு விநியோகம் செய்தது. பின்னர் குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்தி திணித்தது. மனிதவளத்தை கொல்லும் இந்த திட்டம் நமக்கு எந்த பயன்களையும் தரவில்லை.

காரணம் இயல்பான குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவனத்தை ஆண்களுக்கு அரசுகள் ஏற்படுத்த தவறின. இதனால் குடும்பத்தின் அச்சாணியான பெண்களின் உடல்நலம் நாசமானது. அன்றிலிருந்து இன்றுவரையும் கூட நாம் பாலியல் பற்றி பேசாமல் தவறு, ச்சீ என்று சொல்லி வருகிறோம்.  உண்மையில் பேசும் விஷயத்தை விட மனதில் அது பற்றி நாம் நினைத்து வரும் நிழல் சமாச்சாரங்களின் விஸ்வரூபம் பெரிது.

மனதில் பாலுறவு பற்றி அறியாத மனம்தானே பெண்களின் பாலுறுப்பில் இரும்பு கம்பிகளை நுழைப்பது பற்றி எண்ணுகிறது. இதற்கு நாம் வெட்கப்படவேண்டாமா? உண்மையில் அப்படி செய்தவரை சமூகம் குற்றவுணர்ச்சி காரணமாக தூக்கிலிடு, அடித்துக்கொல்லு என்று பேசுகிறது. வெட்கப்படவேண்டியது, தூக்கிலிடப்படவேண்டியது என்பதில் சமூகத்தின் பங்கே கிடையாதா? செக்ஸைப் பற்றி பேசாமல் மறைத்து மனிதர்களின் மனங்களில் வக்கிரத்தை விதைப்பது நமது அரசுதானே!

இவர்கள் நினைத்தால் மாற்றங்களை விதைக்க முடியாதா? நாம் ஐரோப்பிய சமூகங்கள் போல குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் கிடையாது. ரஃபேல் விமானங்களுக்கு இந்து மத பூஜை செய்தாலும் அரசியல் அமைப்புச் சட்டப்படி நாம் மதச்சார்பற்ற நாடுதான் அல்லவா?

நமத இந்தியாவில் குறிப்பிட்ட உடை அணிய வேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது. உங்கள் விருப்ப ப்படி உடை அணியலாம். ஏன் உங்களுக்கு பிடித்த மதம் பற்றி பிரசாரம் கூட செய்யலாம். இந்நிலையில் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான உடல் பற்றி வெட்கம் கொண்டு இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. மேற்கத்திய நாடுகள் இந்த விஷயத்தில் வெளிப்படையான தாராளமய சமூகமாக இருக்கிறது. வெளிப்படையாக பாலியல் பற்றி பேசுகிறார்கள். உச்சம் பற்றி விவாதிக்கிறார்கள். இது பாலியல் பற்றிய தவறான நம்பிக்கைகளை நொறுக்குகிறது. மூடநம்பிக்கைகளை வேரறுக்கிறது.

நிலவின் மறுபக்கத்தை ஆராயப் புகுந்தவர்கள் நம் உடலின் மீது அருவெறுப்பு கொள்வது தவறானது. இனிவரும் காலத்திலும் நாம் இந்த முகமூடிகளை கழற்றாவிட்டால் உலகோடு இணைந்து பயணிப்பது கடினமாகிவிடும்.


சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது!