இ சிகரெட்டை கண்டு அரசுகள் பயப்படுவது இதனால்தான்!





breakfast club dance GIF
giphy.com






புகை நமக்கு பகை!

இ சிகரெட்டுகளைத் தடுத்து புகையிலைக்கு ஆதரவாக இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் உலகளவில் இ சிகரெட்டுகள புகழ்பெற்று வருகின்றன. இதுவரை அமெரிக்காவில் 26 பேர் இதற்கு பலியாகி உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இளைஞர்கள் நேரடியாக இ சிகரெட்டை இப்போது புகைக்கத் தொடங்கியுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். புகையிலை கம்பெனிகள் இ சிகரெட்டை தடை செய்யக்காரணம், மரபான சிகரெட்டுகள் பீடிகளுக்கான லாபம் பறிபோகிறதே என்றுதான். பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி இருக்கின்றன. உண்மையில் இ சிகரெட்டுகளால் சிகரெட் சந்தை பேரழிவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியெல்லாம் கிடையாது என்று பதில் கிடைக்கிறது.

தெரிஞ்சுக்கோ...

உலகிலுள்ள நிகோட்டின் சந்தை மதிப்பு 785 பில்லியன் டாலர்கள். ஏறத்தாழ 89 சதவீத சந்தையில் சிகரெட்தான் ராஜா.


2013-2018 காலகட்டத்தில் சிகரெட்டுகளின் வளர்ச்சி 8 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதே காலத்தில் இ சிகரெட்டுகளின் வளர்ச்சி இருபது மடங்கு அதிகரித்துள்ளது. எங்கே என்கிறீர்களா? ஸ்வீடனில்.


கோவென் அண்ட் கம்பெனி கணக்குப்படி, அமெரிக்காவில் இ சிகரெட் சந்தை மதிப்பு 6.6 பில்லியன் டாலர்களாக உள்ளது.

அமெரிக்காவில் ஜூல் எனும் நிறுவனத்தின் இ சிகரெட் பங்கு 48 சதவீதம் ஆகும்.

ஜூல் நிறுவனத்தின் இ சிகரெட் வேப்பரைசர்களின் விலை ஒரு டாலர்கள் ஆகும். அதாவது விஐபிகளுக்கு மட்டும் இந்த விலை. பிறருக்கு 4 டாலர்கள் செலவாகும். இப்படி தள்ளுபடியில் ஊதித்தள்ளுபவர்களின் பெயரில் டி காப்ரியோ பெல்லி ஹடிட் ஆகிய நட்சத்திரங்கள் உண்டு.

அமெரிக்காவில் உள்ள கஞ்சா ரக ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பொருட்களின் சந்தை மதிப்பு 1.59 மில்லியன் டாலர்களாக உள்ளன. சிபிடி எனும் வேப்பரைசர் சந்தை மதிப்பு 40 மில்லியனாக உள்ளது.


தகவல் - க்வார்ட்ஸ்