அபிஜித் பானர்ஜியின் ஆர்சிடி நுட்பம்! - வறுமை ஒழிப்பு ஆயுதம்!



Image result for abhijit banerjee




அபிஜித் பானர்ஜியின் ஆய்வு!


வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை ஒழிக்க மாத்திரைகளை அரசு வழங்குகிறது. இலவசமாகத்தான். நிறைய பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுப்பார்கள். காசு கொடுத்துத்தான் மருந்துகளை வாங்க வேண்டும். அப்போதுதான் அதன் மதிப்பு தெரியும்  என்று பேசுவார்கள்.

ஆனால் அபிஜித் உள்ளிட்ட மூவரும் அதனை மறுக்கிறார்கள். தொடக்க சுகாதார விஷயங்களை அரசு இலவசமாகவே வழங்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை 1990-2000 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடத்திய கள ஆய்வுகளில் உறுதியாக உணர்ந்துள்ளனர். அதனை அறிக்கையாக எழுதி வெளியிட்டுள்ளனர். இதன்விளைவாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா அமைப்பு ஏழை மக்களுக்கான சுகாதாரத்திட்டங்களை சிறப்பாக திட்டமிட முடிந்தது.

இவர்கள் கண்டுபிடித்த பொருளாதார நுட்பம் ராண்டமைஸ்டு கன்ட்ரோல் ட்ரையல் என்பது சுருக்கமாக ஆர்சிடி(RCT). வறுமை ஒழிப்பில் உள்ள சமூக பொருளாதார தடைகளை இவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத் தீர்க்கும் வழிகளையும் கூறியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு இவர்கள் எம்ஐடியில் அப்துல் லத்தீஃப் ஜமால் போவர்ட்டி ஆக்சன் லேப் (J-Pal) என்பதைத் தொடங்கினர். இதன்மூலம் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 941 ஆர்சிடி ஆய்வுகளை நடத்தியுள்ளனர். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் இவர்கள் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.

நன்றி - டைம்ஸ்