காந்தியை எதிர்க்கும் இன்றைய எதிரிகள் யார்?




Image result for douglas allan,maine university


காந்தியின் அன்றைய எதிரிகளும் இன்றைய எதிரிகளும்!


டக்ளஸ் ஆலன், பேராசிரியர் மைன் பல்கலைக்கழகம். 



மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலும், அவரை நினைவுகூரும் 150 ஆம் ஆண்டு தினத்திலும் கூட அவரின் கொள்கைகளும், அவை பெற்றுத்தந்த எதிரிகளையும் மறக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே புதுமையான மனிதராக காந்தி தெரிந்தார்.

காந்தி வாழும் காலத்தில் அவரை எதிர்த்தவர்களின் முக்கியமானவர்கள் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாவர்க்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இன்றும் இவரது எதிரிகளின் தொண்டர்கள் காந்தியையும், அவரது கொள்கைகளையும் எதிர்த்து வருகின்றனர். அவரின் பல எதிரிகளின் தமக்கான கொள்கைகளை காந்தியின் பேச்சு மற்றும் எழுத்துக்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி வரும் விநோதமும் நடைபெற்று வருகிறது. அதையும் காந்தி அனுமதிக்கிறார்தான்.

காந்தி பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதர். நமது 20 ஆம் நூற்றாண்டு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. அணுஆயுதங்கள், சுயலமான அரசியல், தன் முனைப்பை மட்டுமே கொண்ட நுகர்வு, இனக்குழு சார்ந்த வன்முறை அதிகரிப்பு என காந்தி தன் காலத்தில் வலியுறுத்திய பல்வேறு விஷயங்களுக்கு எதிராக நிலைமை உள்ளளது. அமெரிக்காவில் பாருங்கள். அந்நாட்டை மட்டும் தலைசிறந்ததாக மாற்றுவோம் என்று கூறும்போது இன பாகுபாடு தொடர்பான வன்முறை நிகழ்ச்சிகள் அங்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
காந்திக்கும் அம்பேத்கருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. காந்தி இந்து சுயராஜ்யம் எழுதினார் என்றால் அம்பேத்கர், சாதி ஒழிப்பு பற்றி எழுதினார்.

காந்தி, ஒருவகையில் கீழ்நிலை சாதிகளின் பிரச்னைகளைப் பற்றி அறிந்துகொண்டது அம்பேத்கரின் எழுத்துக்களிலிருந்துதான். காந்தி தனக்கு எல்லாமே தெரியும் என்று கூறியதில்லை. அவர் தன் கருத்துக்களை காலத்திற்கேற்ப மாற்றி எழுதி வந்தார். முன்பு சொன்னதற்கு நான் அந்த சூழலில் அப்படிச் சொல்லியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். 

இன்றுள்ள பிரச்னைகளுக்கு காந்தியிடம் தீர்வுகள் இருக்கிறதா? காந்தி அடிப்படையான சுயமாற்றத்தை வலியுறுத்துகிறார். அகிம்சை, உண்மை ஆகியவை அவரின் அடிப்படைகள். காந்தியை எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்கள், காந்தியின் கொள்கைகளின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் அதனை முற்றாக நிராகரிக்கின்றனர். தற்காலத்திற்கு பொருந்தாது என்று ஒரேயடியாக பேசுகின்றனர். காந்தி தன் கருத்தை எதிர்ப்பவர்களிடமும் உரையாட தயாராக இருந்தார். இந்த குணத்தை அவரின் எதிர்கருத்தாளர்கள் கொண்டிருக்கவில்லை என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இன்றைய தனிமனித ஒழுக்கம், அரசியல், பொருளாதாரம், சமூகம், சூழல் பற்றி என காந்தி பேசாத விஷயங்களே கிடையாது. அவை காலம் என்ற வரம்பிற்குள் சிக்கியிருக்கலாம். காந்தி கூறிய அடிப்படைகளை முன்வைத்து நாம் நம் முன் உள்ள சிக்கல்களை விடுவிக்க வேண்டியதுதான்.

நன்றி: அவுட்லுக், காந்தி 150