ஸ்கூபி டூ தியரிகள் - நாம் அறியாத ரகசியங்கள்!
1960 ஆம் ஆண்டு வெளியான ஹன்னா பார்பரா சீரிஸைச் சேர்ந்த ஸ்கூபி டூ மிகப் பிரபலமான அனிமேஷன் தொடர். இத்தொடர் பற்றிய பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம். இங்கு முடிந்தவரை சில விஷயங்களுக்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.
ஸ்கூபி டூ என்பது ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்ற நாயை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரஷ்யா, அமெரிக்காவுக்கு இடையே விண்வெளிப்போர் இருந்தது. இதற்கு ரசிகர்களின் தியரி, ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்ட ஸ்கூபி டூ, மனிதர்களின் பேச்சை புரிந்துகொள்ளக்கூடியது. மிஸ்டரி.இன்க் எனும் கம்பெனியின் நான்கு ஆட்களோடு ஒன்றாக சுற்றுவது ஸ்கூபிடூவின் வேலை. சேஜி எனும் கதாபாத்திரம் ஸ்கூபியோடு எப்போதும் கூடவே இருப்பது. இருவரும்தான் அனைத்து விஷயங்களிலும் உள்ளே நுழைந்து கண்டுபிடிப்பது.
எல்லாமே குறியீடு
ஸ்கூபி டூ பேய் மர்மங்களை துப்பறியச் செல்லும் அனைத்து இடங்களுமே பேய் பங்களா மாதிரியே இருக்கும். ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. அதைக் குறிக்கும் குறியீடுகளாக சுரங்கம், மனிதர்கள் இல்லாத பாழடைந்த நகரம் என குற்றம் நடைபெறும் இடங்களாக காட்டுவார்கள். மேலும் ஸ்கூபிக்கு குற்றங்கள் கண்டுபிடிப்பதை விட பர்கர் சாப்பிடுவதில்தான் ஆர்வம் அதிகம். நாய் தூங்குவதையும் சாப்பிடுவதையும் தாண்டி என்ன யோசிக்கும். சேஜி இதற்கு செம டஃப் கொடுப்பார். இறுதியில் ஸ்கூபி டூதான் ஜெயிக்கும்.
என்ன மாதிரியான கம்பெனி இது?
மிஸ்டரி இன்க், ஒரு டிடெக்டிவ் கம்பெனி. குறிப்பாக பேய்கள், அமானுஷ்யங்களை கண்டுபிடிக்கும் நிறுவனம், பேய், அமானுஷ்யம் எல்லாம் கிடையாது. மனிதர்கள் செய்யும் பித்தலாட்டம்தான் அனைத்தும் என்று நிரூபிப்பது இவர்களது டாஸ்க். இதில் திட்டம் போடுவது ஃபிரெட்டின் பணி, அதனை சொதப்பி செய்வது டஃப்னே வின் வேலை. சொதப்பலை துல்லியமாக்குவது கண்ணாடி போட்ட வெல்மாவின் பணி. வெல்மாவின் திட்டத்தை காமெடி பொடிமாசாக மாற்றி வெற்றிக்கொடி நாட்டுவது சேஜி - ஸ்கூபி டூவின் வேலை.
நோக்கம் என்ன?
ஸ்கூபி டூ சீரிஸ் முதலில் வெளியானபோது வியட்நாம் போர் நடைபெற்றது. கதையில் வெல்மா போருக்கு எதிரானவள். ஃபிரெட் கனடாவைச் சேர்ந்தவன். தன் காதலி டஃப்னேவோடு வேனை ஓட்டிக்கொண்டு வருவான். அவனோடு சேஜி எனும் ஹிப்பி நண்பனும் உண்டு. காரை எப்போதும் ஃபிரெட் மட்டுமே ஓட்டுவான். காரணம் என்னவென்றால், சேஜி தன் லைசென்சை தொலைத்துவிட்டான் அதனால்தான் என்கிறார்கள்.
இப்படியே குறியீடுகளை யோசித்தால் மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா வரை போகிறது கதை. கேப்டன் அமெரிக்காவின் மகன்தான் சேஜி ரோஜர்ஸ் என்று கூறுகிறார்கள். எனவே இதுவே போதும் இல்லையா?
நன்றி - மென்டல் ஃபிளாஸ்