இடுகைகள்

பெண்ணுரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கான தொழில், பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம் பற்றி கேள்வி கேட்கும் வரலாற்று சீனத்தொடர்!

படம்
        நியூ லைப் பிகின்ஸ் சீன தொடர் ஆறாவது இளவரசர், தனது துணைவியை அதிகாரப்பூர்வ மனைவியாக மாற்றிக்கொள்ள என்னென்ன செய்கிறார், அவரது துணைவியின் திறமைகள் எப்படி இளவரசரின் நிர்வாக பணிகளுக்கு உதவியாக உள்ளன என்பதே கதை. பொதுவான சீன தொடர்களில் ஆண்கள், பெண்களை காதலுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இந்த தொடரில் வரும் இளவரசர் பாத்திரம் தனது மனைவியை அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார். அவரது மனைவியும், கணவரின் அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. அதேசமயம், பெண்களுக்கான வேலை, சுயமரியாதை, முன்னேற்றம் என்பதில் தன் அம்மாவிடம் கற்றுக்கொண்டதை ஷின் மாகாணத்தில் செயல்படுத்துகிறார். இந்த கதை நடக்கும் காலகட்டத்தில் ஷின் மாகாணம், பிற ஒன்பது மாகாணங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு. அன்றைய காலகட்டத்தில் பெண்களை சந்தைப்பொருளாக அரசியலில் பயன்படும் காய்களாக மக்கள் எண்ணினர். இதனால், பிற மாகாண மக்கள் தங்களது செல்வாக்கு, அதிகாரத்திற்காக இளம்பெண்களை மனைவி அந்தஸ்தில், அல்லது அதிகாரப்பூர்வ மணமின்றி துணைவியாக இருக்க அனுமதித்தனர். இது சமூகத்தில் உள்ள ஆண்களின் ...

அம்மா விட்டுச்சென்ற தடயங்களை தேடி புறப்படும் மகளின் கதை! - எனோலா ஹோம்ஸ் 2020

படம்
        எனோலா ஹோம்ஸ் Screenplay by Jack Thorne Based on The Enola Holmes Mysteries: The Case of the Missing Marquess by Nancy Springer Directed by Harry Bradbeer   Music by Daniel Pemberton Cinematography Giles Nuttgens   எனோலா , ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை . எனோலாவின் தாய் , அவரை பள்ளிக்கு அனுப்பாமலேயே அனைத்து பாடங்களையும் வீட்டிலேயே கற்பிக்கிறார் . இதனால் எனோலாவுக்கு சண்டைப்பயிற்சி , கணிதம் , அறிவியல் , வேதியியல் என அனைத்துமே அத்துபடியாகிறது . ஒருநாள் திடீரென காலையில் எனோலாவின் அம்மாவைக் காணவில்லை . அவரை எப்படி எனோலா கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை . படம் முழுக்க எனோலா , தான் தாய் சொல்லித்தந்த விஷயங்கள் வழி எப்படி செயல்பட்டு தாயை தேடிப்போகிறார் . வாழ்க்கையில் முதல் காதலை எப்படி பெறுகிறார் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள் . எனோலாவின் கதையை அவரே கேமராவைப் பார்த்து அடிக்கடி சொல்லுவது படத்தின் புதுமைகளில் ஒன்று . ஷெர்லாக் ஹோம்சை பார்த்து பழகியவர்களுக்கு ஹென்றிக் கோவில் எப்படி செட் ஆவார் என்பது சந்தேகம்தான் . படம் அவரைப்பற்றியல்ல என...