இடுகைகள்

பினராயி விஜயன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செங்கொடியை பறக்க விட்ட பினராயி விஜயன்! - எதிர்ப்புகளை முறியடித்து மக்கள் நலன் காத்த தலைவர்

படம்
      பினராயி விஜயன்/விகடன்       பினராயி விஜயன் - மகத்தான தலைவன் கேரளத்தில் இடதுசாரி முன்னணி அரசு முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று 140 சீட்டுகளில் 100 சீட்டுகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது . இத்தனைக்கும் 75 வயதான விஜயனின் மீது தங்க கடத்தல் வழக்கு , சபரிமலை பிரச்னை என பல்வேறு வழக்குகளை பாஜக கட்சி தொடுத்தது . மத்திய விசாரணை அமைப்புகளின் மூலம் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது . இதனை முதலில் அமைதியாக பார்த்த விஜயன் , தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அமைப்புகளை மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதித்தார் . இதனை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பின்பற்றின . இடதுசாரிகள் சிறப்பாக வென்றதோடு , பாஜக கட்சி வெல்லுவதற்கான வாய்ப்பையும் தடுத்துள்ளனர் . 2016 தேர்தலை விட எட்டு சீட்டுகளை மக்கள் கொடுத்துள்ளனர் என்பதோடு , 2024 இல் மக்களவைத் தேர்தலிலும் கூட பாஜகவிற்கு எதிரான கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது . இதில் ம ம்தா , ஸ்டாலின் , பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கலாம் . நிபா நோய்த்தொற்று , வெள்ளப்பிரச்சினை , கொரோனாவை சமாளித்தது

மதவாத குழுக்களுக்கு கேரளத்தில் எந்த வரவேற்பும் கிடைக்காது! கேரள முதல்வர் பினராயி விஜயன்

படம்
          பினராயி விஜயன் கேரள முதல்வர் உங்கள் இடதுசாரி அரசை மோசமாக காட்சிபடுத்துவதோடு , அதனை பலவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறிவருகிறீர்கள் . ஏன் அப்படி கூறுகிறீர்கள் ? எங்கள் அரசு மீதான தாக்குதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது . அப்போது பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி அரசு வெற்றி பெற்றிருந்தது . ஊடகங்களை விலைக்கு வாங்கிய பாஜக தலைவர்கள் அரசு மீது குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கினர் . மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி மாநில அரசின்போது பல்வேறு வழக்குகளைத் தொடுத்தனர் . என்மீது புகார் கொடுத்தவர் தற்போது அதனை மறுத்துவருகிறார் . அவரின் பெயரை நான் கூற விரும்பவில்லை .    தங்க கடத்தல் வழக்கு பற்றி முன்னதாகவே பிரதமருக்கு எழுதியிருக்கிறேன் என்று சொன்னீர்கள் . வழக்கு விசாரணை எங்கு தவறாகிப்போனதுழ பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான் . தங்கத்தை சட்டவிரோதமாக கடத்துவது என்பது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது . விசாரணை தொடங்குவதற்கு ஆதரவாக நின்றேன் . ஆனால் மெல்ல மத்திய அரசின் விசாரணை எங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பிவிட்டது . நீங்கள் முன்னர் காங்

ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

படம்
            நேர்காணல் கே . கே . சைலஜா தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள் ? நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின . நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை . கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது . எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம் . கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது . கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு . அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது . இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது . இரண்டாவது அலை பரவுவதால் , மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா ? பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை . எனவே , மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன் . மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம் . கொர

மத்திய அரசு உதவாவிட்டாலும் மாநில அரசு மக்களுக்கு உதவும்! - பினராயி விஜயன்

படம்
toi நேர்காணல் பினராயி விஜயன், கேரள முதல்வர் கேரள மாநிலம் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டபோது, இழப்பீட்டுத் தொகை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னதாகவே திட்டங்களை அறிவித்து அனைத்து நாடுகளின் பாராட்டுக்களையும பெற்றார் பினராயி விஜயன். அவரிடம் வேகமாக இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு அவரின்நோய்தடுப்பு திட்டம் பற்றி பேசினோம். கேரள மாநிலம் தங்களின் முன்னோடியான திட்டங்களால் பலரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. எப்படி இந்த சாதனைகள் சாத்தியமானது? எங்களது மாநிலம் முன்னரே அடிப்படையான பொதுசுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு ஆகியவற்றில் முன்னோடியாக விளங்குகிறது. நோய் பாதிப்பு பற்றிய விவகாரத்தில் அரசு அமைப்புகளோடு ஏராளமான தன்னார்வ நிறுவனங்களும் கைகோத்து இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் சீனாவில் கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் இதுபற்றி கவனமாக இருக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டோம். இந்த முன்னெச்சரிக்கைக்கு காரணம் உண்டு. நாங்கள் இதற்கு முன்பு நிபா வைரஸ் பாதிப்பை சமாளித்த அனுபவமும் இதற்கு உதவியது. கிராமத்தில் உள்ள