மத்திய அரசு உதவாவிட்டாலும் மாநில அரசு மக்களுக்கு உதவும்! - பினராயி விஜயன்
toi |
நேர்காணல்
பினராயி விஜயன், கேரள முதல்வர்
கேரள மாநிலம் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டபோது, இழப்பீட்டுத் தொகை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னதாகவே திட்டங்களை அறிவித்து அனைத்து நாடுகளின் பாராட்டுக்களையும பெற்றார் பினராயி விஜயன். அவரிடம் வேகமாக இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு அவரின்நோய்தடுப்பு திட்டம் பற்றி பேசினோம்.
கேரள மாநிலம் தங்களின் முன்னோடியான திட்டங்களால் பலரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. எப்படி இந்த சாதனைகள் சாத்தியமானது?
எங்களது மாநிலம் முன்னரே அடிப்படையான பொதுசுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு ஆகியவற்றில் முன்னோடியாக விளங்குகிறது. நோய் பாதிப்பு பற்றிய விவகாரத்தில் அரசு அமைப்புகளோடு ஏராளமான தன்னார்வ நிறுவனங்களும் கைகோத்து இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் சீனாவில் கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் இதுபற்றி கவனமாக இருக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டோம். இந்த முன்னெச்சரிக்கைக்கு காரணம் உண்டு. நாங்கள் இதற்கு முன்பு நிபா வைரஸ் பாதிப்பை சமாளித்த அனுபவமும் இதற்கு உதவியது. கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் நகரில் உள்ள அரசு மருத்துவமனைகள் வரை நாங்கள் சிறப்பான வலையமைப்பைக் கொண்டுள்ளோம்.
அரசு சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, சீனாவில் இருந்து வந்த மாணவர்களுக்கு மருத்துவ சோதனைகள் நடத்துவதை பார்வையிட்டார். இதற்கான வழிமுறைகளை அவர் மருத்துவர்களுக்கு வழங்கினார். தினசரி மூன்று முறை பல்வேறு அமைச்சக அதிகாரிகளுடன் பேசி அவர்களுக்கான திட்டங்களை வழிகாட்டுகளை நான் வழங்கினேன். மேலும் கேரளத்தில் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகள் வலுவாக இருப்பதால் நாங்கள் இப்பிரச்னையை எளிதாக சமாளித்தோம்.
உங்களது கோவிட் 19 தடுப்பு முறையில் சிறப்பான அம்சங்கள் என்ன?
மாநில முதல்வர் என்ற முறையில் கட்சி பாகுபாடற்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் பேசி ஒத்துழைப்பு தர கேட்டுள்ளேன். மத தலைவர்களுடன் பேசி அவர்களின் விழாக்களை ஒத்தி வைக்க கோரியுள்ளேன். மேலும் நிபா வைரஸ் தாக்குதல் அனுபவத்தால் எங்களது மருத்துவர்கள் இப்பிரச்னைக்கு அதிகம் கவனம் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். எங்களின் பலம் நாங்கள் கல்வி அறிவு பெற்றுள்ளது. மாநிலத்திற்கு ஒரு பிரச்னை என்றால் பாகுபாடற்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராடுவது, பலவீனம் என்றால், எங்களிடம் நிறைய வளங்கள் கிடையாது. என்பதுதான்.
கேரளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதே? என்ன கொள்கை மாற்றங்களை திட்டங்களை வைத்துள்ளீர்கள்.
எங்களிடம் மாறாத திட்டங்கள் என்று ஒன்றும் கிடையாது. எண்ணிக்கை அதிகளவ உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. மலையாளிகள் அதிகளவு இத்தாலியில்தான் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மாநிலத்தில் 22 வயது முதல் 40 வயது வரையிலானவர்களை ஒன்றுதிரட்டி அவசரகால உதவிப்படையை அமைத்துள்ளோம். மூத்த குடிமைப்பணி அதிகாரிகளின் தலைமையில் அவசர உதவி மையத்தை அமைத்து உதவி தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கி வருகிறோம்.
உங்களது நிர்வாகப்பணி சார்ந்து எதிலாவது அதிருப்தி உள்ளதா?
யார் மீதும் எந்த புகார்களும், அதிருப்தியும் இல்லை. ஆனால் நாங்கள் வழிகாட்டும் நோய் பற்றிய விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீதுதான் வருத்தம் உள்ளது. தனிமைப்படுத்தல் என்பது நோய் பரவாமல் தடுக்கும் முறை என்பதை சிலர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
கோவிட் 19 நோய்த்தடுப்பில் நீங்கள் மக்களுக்கு உணவு, பணம் வழங்கியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதைப்பற்றி சொல்லுங்கள்.
கோவிட் -19 நோய்தடுப்பிற்கான முதல் அதிகாரிகள் கூட்டத்தில் நான் சொன்னது இதுதான். மக்கள் சாதாரண நாட்களில் என்னென்ன வசதிகள் பெற்றார்களோ அத்தனையும் அவர்களுக்கு கிடைக்கவேண்டும். கேரளம் பசி, பட்டினியற்ற மாநிலம். இங்குள்ள மக்கள் இரவில் பசியோடு படுக்கச்செல்லக்கூடாது. எனவே அரசு சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைய சமையல் அறைகளை அமைத்து உணவு தயாரித்து வழங்கி வருகிறோம்.
கேரள அரசு ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் கோவிட் -19க்கான இருபது ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்திருக்கிறீர்களே?
மத்திய அரசு மக்களுக்கான தொகையை முன்னரே அறிவித்திருந்தால் நாங்கள் அறிவிக்க வேண்டி இருந்திருக்காது. அதேசமயம் மக்களைக் காப்பது அரசின் கடமை. நிதி நெருக்கடி இருந்தாலும் அதனை சமாளித்து மக்களுக்கான நிவாரணத்தை நாங்கள் வழங்குவோம். நாங்கள் வழங்கிய இருபதாயிரம் கோடி ரூபாயில், மக்களின் பென்சன், ரேஷன், வேலைவாய்ப்பு திட்டம், வரி தள்ளுபடி ஆகியவையும் அடங்கும். இவையின்றி குடும்பஸ்த்ரீ முறையில் மக்கள் அரசிடம் கடன் பெறுவதற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அவர்கள் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் நாங்கள் மக்களுக்கு உதவ தயாராகவே இருந்தோம்.
நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 28,2020 லிஸ் மேத்யூ