தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைப்பதும் மனநல பிரச்னைதான்!


ஹோர்டிங் டிஸ்ஆர்டர்

மரபணு ரீதியான அல்லது அதிக பொறுப்புகளை சுமக்கிறவர்களுக்கு ஏற்படும் பிரச்னை. ஒருவர் வாங்கித்தந்த சாக்லெட் காகிதம் முதல் அவரின் அனைத்து வகையான கேபிள், மளிகைக்கடை, சூப்பர் மார்க்கெட் பில் வரை சேமித்துவைத்துக் கொள்ளும் பழக்கம் இந்த குறைபாடு உள்ளவர்களிடம் இருக்கும். இது குறைபாடு என்பதை இவர்களுக்கு சொல்லி புரியவைப்பது கடினம். மேலும் இதற்கான ஆலோசனைகளையும் இவர்கள் பெறுவதை அவமானமக கருதுவார்கள்.

இவர்கள் இருக்கும் அறை, பணிசெய்யும் அறை மிகப்பெரிய குப்பைத்தொட்டி போலவே இருக்கும். எனவே பிறரிடம் தகவல் தொடர்பு போன்ற விஷயங்களை இவர்களால் பராமரிக்க முடியாது. பின்னே எப்போதும் கோப்புகளுக்கும், பில்களுக்கு இடையில் ஒளிந்திருந்தால் யாருக்குத்தான் இப்படி இருப்பவர்களைப் பிடிக்கும்.

 

பிடிடி

பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்

தங்களது உடல் எப்படியிருக்கிறது என்று இடைவிடாமல் யோசிப்பவர்களுக்கு ஏற்படும் குறைபாடு. தங்கள் உடல் மீது தீவிரமான கழிவிரக்கம் கொண்டு தான் அழகாக இல்லை என கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதோடு சும்மாயிருக்காமல் இந்த மூக்க நீளமாக இருக்கிறது. உதடு சப்பையாக இருக்கிறது என அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவது முதல் பிளாஸ்டிக் சர்ஜரி வரை செல்வார்கள்.

கண்ணாடியில் முகம் பார்க்கவே அதிக நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். தன்னைப் பற்றிய தீவிரமான தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள். நான் அழகாக இல்லை. அழகாக இல்லாதவர்களால் எந்த வெற்றியும் பெற முடியாது. நான் ஒரு வேஸ்ட் என பேசிக்கொண்டு திரிவார்கள்.

அறிகுறிகள்

கண்களை குருடாக்கும் நிறங்களில் உடைகளை அணிவார்கள். மேக்கப்பும் தூக்கலாக இருக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி எங்கே செய்யலாம் என விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். ஏராளமான டயட்களை கடைபிடித்து ஒரே வாரத்தில் உடல் அமைப்பு மாறிவிடவேண்டுமென விரும்புவார்கள்.

கார் கண்ணாடில் கூட தன் உருவத்தைப் பார்த்து திருத்தம் செய்து கொண்டிருப்பார்கள். தன்னைக் கடப்பவர்கள் தன்னைப் பார்த்து ஏதோ கமெண்ட் அடிக்கிறார்கள் என மனதிற்குள் மறுகுவார்கள்.

தாழ்வு மனப்பான்மையால் மன அழுத்தம் உச்சத்திற்கு செல்லும்.

இதற்கு உளவியல் வல்லுநர்களின் அறிவுறுத்தல்படி தெரபி வகுப்புகள் தேவை. மனநிலையை சமப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படும்.

 

கருத்துகள்