நெருக்கடி நிலையில் எரிமலையாக வெடிக்கும் மனம்!


ஏஎஸ்ஆர் – அக்யூட் ஸ்டிரெஸ் டிஸ்ஆர்டர்

சாலையில் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து என சின்ன சம்பவங்கள் கூட ஏஎஸ்ஆரை தூண்டிவிடக்கூடும். இதனால் பேனிக் தாக்குதல் ஏற்படும். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தமுடியாது, உணர்ச்சிகளை இவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் அந்த இடத்தில் வெடித்துவிடுவார்கள். பெரும்பாலும் நடக்கும் சம்பவங்களுக்கு ஆவேசமான உணர்ச்சிகரமான பதிலடியாக இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் ஆறே மாதங்களில் பிடிஎஸ்டி குறைபாட்டுக்கு இந்நபர்கள் ஆளாவார்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சி காரணமாக உருவாகிற பாதிப்பு ஒருமாதம் வரை இருக்கும். பிடிஎஸ்டி அறிகுறிகள் மூன்று மாதங்கள் வரை உடலில் இருக்கும்.

இதற்கு தனியே மருந்துகள் ஏதுமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் அவர்களிடம் பேசி ஆதரவாக இருந்தால் போதும். உளவியல் வல்லுநர்கள் இதற்கென தனி தெரபிகளை வழங்குகிறார்கள்.

 

அட்ஜெஸ்ட்மெண்ட் டிஸ்ஆர்டர்

குடும்பத்தில் உள்ளவர்களின் இறப்பு, பெற்றோரின் சண்டை, விவாகரத்து, நோய், காயமுறுவது, இடம்பெயர்வு, வேலையின்மை, வேலையில் நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நேரும் குறைபாடு இது. அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கள் அந்த பிரச்னையை சமாளிக்க பழகிவிட்டால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அதையும் மீறி சூழல் செல்லும்போது உளவியல் வல்லுநர்களின் ஆலோசனையும், மருந்துகளும் தேவைப்படும்.

தூக்கமின்மை, எப்போதும் சோகமாக இருப்பது, பதற்றம் கொள்வது, செய்யும் பணியில் கவனமின்மையுடன் செயல்படுவது, அழுதுகொண்டே இருப்பது பொதுவான அறிகுறிகளாகும். மூன்று மாதங்களிலிருந்து ஆறுமாதங்களுக்கு ஒருவருக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவருக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும். அது அவரின் சொந்த, தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்.

 

 

 

 


கருத்துகள்