கொரோனா பாதிப்பிலும் ஏழைகளுக்கு உதவும் நாயகிகள்!
pixabay |
கொரோனா நாயகிகள்
தூலிகா குப்தா, ஜெய்ப்பூர்
கோவிட் -19 நோய்த்தொற்று வேகமாக பரவிவருகிறது. அரசைப் பொறுத்தவரை விளக்கேற்றுவது, கைதட்டுவது இக்காலத்தை விழா போலவே கொண்டாடுகிறது. ஆனால் சாதாரண தினக்கூலி மனிதர்களுக்கு இதெல்லாம் உதவாது. பசியில் காதடைத்து போய் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கைதட்டி பாடுவது, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றும் எண்ணம் இருக்குமா என்று தெரியவில்லை. இதற்கு எதிராக தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறார்கள். எந்த பேரழிவிலும் தன்னார்வமாக செயல்பட்டு மக்களுக்கு உதவும் நல்லுள்ளங்கள் உண்டு. அவர்களைப் பார்ப்போம்.
இந்திய கைவினைப் பொருட்கள் வடிவமைப்ப நிறுவனத்தைச் சேர்ந்த தூலிகா குப்தா, தனது துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு நெருக்கடியான இக்காலத்தில் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார். ஊரடங்கு காலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களும, எங்களது துறைசார்ந்த கைவினைஞர்களும் உணவின்றி, பணமின்றி தடுமாறியதை டிவி செய்தி வழியாக பார்த்தேன். எனவே அவர்களுக்கு முடிந்தவரை உதவ முடிவெடுத்தேன் என்கிறார். இவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி, கைவினைக் கலைஞர்களுக்கு முக கவசம், உணவு ஆகியவற்றை கைவினை வடிவமைப்பு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்ட நிதியைப் பயன்படுத்தி வழங்கியுள்ளார்.
இவர்களின் வடிவமைப்பு நிறுவனத்திலுள்ள உணவகம் மூலம் தினசரி 300 உணவுப் பொட்டலங்களை தயாரித்து வழங்கியுள்ளார். மேலும் டில்லி, ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலுள்ள ஏழை மக்களுக்கும் உணவ, முக கவசம் ஆகியவற்றை வழங்குவதற்கான நிதியுதவிகளை செய்ய ஆட்களை ஒருங்கிணைத்து சாதித்துள்ளார்.
அனைத்து உதவிகளையும் கொண்டுபோய் சேர்க்க அனைத்து இடங்களிலும் தூலிகாவிற்கு நட்புகள் இருப்பது சாத்தியம் இல்லை. எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணிபுரிந்து வருகிறார்.
ருஷான் காம்பட்டா, அகமதாபாத்
ருஷான் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வந்தவர் ஆவர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, அரசு அதுவரை பத்து ரூபாய்க்கு மக்களுக்கு வழங்கி வந்து உணவு வகைகளும் நிறுத்தப்பட்டன. குறைந்தவிலை உணவும் இல்லையென்றால் அவர்களின் வாழ்க்கை என்னாவது என்று தனக்குத் தெரிந்த பல்வேறு அரசியல்வாதிகளை அணுகி, அத்திட்டத்தை தொடருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் நோய்த்தொற்று காரணமாக அதனை தொடர முடியாது என அவர்கள் கூறிவிட்டனர். இதனால் இச்செயல்பாட்டை தானே செய்வதாக பொறுப்பில் எடுத்துக்கொண்டார். ருஷான்.
மானவ் சேவா மண்டல் என்ற நிறுவனத்தின் உதவியுடன் காலை மாலை என இருவேளைகளும் பூரி, சப்ஜி என உணவு வகைகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கினார். ஏறத்தாழ 4 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை காலையிலும், மாலையிலும் வழங்கியுள்ளார். இவர்களது செயல்பாட்டிற்கு குஜராத் காவல்துறையின் உதவியும் கிடைத்துள்ளது. இதனால் உணவு விநியோகம் பிரச்னையின்றி நடந்துள்ளது.
பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு 2500 லிட்டர் கைகழுவும் சானிடைசர்களை வாங்கித் தந்து அசத்தியுள்ளார். ”இது மக்களுக்கு உதவி செய்யும் நேரம். நான்கு உணவுப்பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு நானூறு உணவுப் பொட்டலங்களை வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விளம்பரம் தேடுவது தவறானது.” என அதிரடிக்கிறார் ருஷான்.
அனகா பரலிகர், புனே
மக்களுக்கு நிறைய பேர் உதவ விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதனை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. சில அமைப்புகள் மக்களுக்கு உதவத் தொடங்கினால், இத்தகையோர் அதில் இணைந்து பணி செய்யத் தொடங்கிவிடுகிறார்கள் என்கிறார் புனேவைச் சேர்ந்த அனகா பரலிகர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி கூலிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் இதில் அறியாதது, அவசியமான மருந்துகள், பொருட்கள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் முதியோர்தான்.
அவர்களுக்கு அவசியமான பொருட்களையும், மருந்துகளையும் வழங்கி வருகிறார் வழக்குரைஞரும், சமூக செயல்பாட்டாளருமான அனகா பரலிகர். மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்கான வாட்ஸ் அப் செய்தியைப் பார்த்து அதில் இணைந்து தன்னுடைய போனில் உள்ள உதவி செய்பவர்களுக்கான எண்களையும் அளித்திருக்கிறார் அனகா. அதற்குப்பிறகுதான் அவருக்கு தெரிந்தது, ஏராளமான மக்கள் எப்படி பணியாற்றுவது என்று குழம்பி நின்றார்கள் என. அனகா அதற்குப்பிறகு நிற்கவே நேரமில்லை. புனே மட்டுமல்லாது நாடு முழுவதுமிருந்து ஏராளமான தன்னார்வலர்களும் உதவி கேட்டு கோரிக்கைகளும் குவிந்தன.
உணவுகளையும், மருந்துகளையும் பெற்று முதியவர்களுக்கு அனுப்பும் பணிக்கு அரசின் ஆதரவையும் காவல்துறையின் உதவியையும் பெற்று செயல்பட்டு வருகிறார் அனகா. இவர் தான் பணிபுரியும் நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கான கழிவறை கதவு, தண்ணீர் வசதியின்றி அசுத்தமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 2012ஆம் ஆண்டு இதனை பற்றி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அரசின் உதவிகளைப் பெற்று நிதிதிரட்டி கழிவறையை மேம்படுத்தியிருக்கிறார்.
நவ்னீத் கில், அகமதாபாத்
குஜராத்தில் நினி கிச்சன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் நவ்னீத் கில். இவர் தனது ஊழியர்களுக்கும், வீடற்ற தொழிலாளர்களுக்கும், தினக்கூலிகளுக்கும் அம்தாவத் என்ன திட்டத்தின் மூலம் உணவு தயாரித்து வழங்கி வருகிறார். அவரது உணவக சமையல்காரர்கள் இருவர் கடையில் உணவு சமைத்து தங்களுக்கும், பிறருக்கும் வழங்கி வருகின்றனர்.
உணவகம் செயல்படாமல் எத்தனை நாட்களுக்கு இப்படி உதவிகளை வழங்க முடியும்? நவ்னீத்துக்கும் நிதிப்பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவர் டைனிங் பாண்ட்ஸ்களை அறிமுகப்படுத்தினார். இதன்படி நீங்கள் நினி உணவகத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்து டைனிங் பாண்ட்ஸ்களை வாங்கிக்கொண்டால் ஊரடங்கு முடிந்தபிறகு அதனை உணவகத்தில் கொடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பணத்தில் மூலம் ஏழைகளுக்கு நவ்னீத் தாராளமாக உதவி செய்ய முடிந்தது. இதனால் தினசரி 6500க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை தயாரித்து ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர். பல் மருத்துவம் படித்துவிட்டு உணவுத்துறைக்கு வந்துள்ளவர் நவ்னீத். தனது ஊழியர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களான சானிடைசர், ப்ளீச்சிங் பவுடர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். மேலும் கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கழுவுவதற்கான அலார அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
நன்றி: ஃபெமினா, கால்வ்யானா ரத்தோட், ராதிகா சதி பட்வர்தன்
கருத்துகள்
கருத்துரையிடுக