போலிச்செய்திகள் இந்தியர்கள் மீது தீவிர ஆதிக்கம் செலுத்தி வருகிறது! - ஜோயோஜீத் பால்
ஜோயோஜீத் பால் |
போலிச்செய்திகளை நம்பி பிறரை புகார் சொல்ல மக்கள் தயாராக இருக்கிறார்கள்!
ஜோயோஜீத் பால், மிச்சிகன் பல்கலைக்கழக தகவல்தொடர்புத்துறை உதவிப் பேராசிரியர்.
சமூக வலைத்தளங்கள் போலிச்செய்திகளை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்படுகின்றன என்று நினைக்கிறீர்களா?
மக்கள் தொடர்பு நிலை சார்ந்த கொள்கைளின் கோளாறு என்று நினைக்கிறேன். மேலும் ஏராளமான தன்னார்வக் குழுக்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெறும் போலிச்செய்தி, இவை சார்ந்த மனநிலை பற்றி ஆராய பல்லாயிரம் கோடி பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நிறைய நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது.
சிலர் அனுப்பும் போலிச்செய்திகளை மக்கள் பிறருக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனை தடுப்பது எப்படி?
சமூக வலைத்தளம் வழியாக வரும் செய்திகளை ஒருவர் பிறருக்கு பகிருவதற்கு முன்னர், அதனை சம்ப்ந்தப்பட்டவரிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும். அல்லது அவர்கள் இணையத்தில் வலைத்தளம் வழியாக சோதிக்கவேண்டும். இப்படி செய்வதால் போலிச்செய்திகள் பிறருக்கு பரவாது தடுக்கப்படும்.
இந்தியாவில் தற்போது பரவி வரும் போலிச்செய்திகள் ஏராளமான சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. போலிசெய்திகள் என்பவை உலகம் முழுக்கவே இருக்கின்றனவா? இந்தியாவில் ஏற்படும் பிரச்னையின் தனித்தன்மை என்ன?
வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளத்தின் என்கிரிப்ஷன் போன்ற விஷயங்களில் வெளிப்படைத்தன்மை கிடையாது. குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்து எந்த பிரச்னையை எழுப்பினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என இதனை உருவாக்குகிறவர்கள் யோசித்து செயல்படுகிறார்கள். பங்குச்சந்தை, கருப்பு பணம், வங்கிகளின் வீழ்ச்சி என்பதை பற்றிய போலிச்செய்திகள் பரவினால் மக்களில் பெரும்பாலானோர் தீவிரமான பாதிப்புக்கு உட்படுவார்கள். இந்தியாவில் பிரிவினைவாதம் இப்பணியை செய்கிறது. இதன்விளைவாக குறிப்பிட்ட இனக்குழுவை வீழ்த்தவென திட்டமிட்டு செயல்பட்டு போலிச்செய்திகளை இதற்கெனவே உருவாக்கி வெளியிட்டு அபாயகரமான பதற்றமான நிலையை உருவாக்குகிறார்கள்.
பெருந்தொற்று பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நகைச்சுவை கலந்து வைரஸ் பரவலைப் பற்றி பேசிவருகிறார்கள். பதிவிடுகிறார்கள். இம்முயற்சிய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் என்று நினைக்கிறீர்களா?
நகைச்சுவை என்பது விழிப்புணர்வு பிரசாரத்திற்கு முக்கியமானது. கேரளத்தில் பல்வேறு பாடல்களை விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறீர்கள். தற்போது ஜெய்ப்பூர் காவல்துறை மசக்கலி பாடலை மோசமாக மறு உருவாக்கம் செய்து கோவிட் -19 விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். மக்களின் பழக்க வழக்கத்தை நகைச்சுவை மாற்றுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
நீங்கள் கோவிட் -19 நோய்த்தொற்று தொடர்பான போலிச்செய்திகளை ஆராய்ந்து வருகிறார்கள். இவை எப்படி பரவுகிறது, இதன் பாதிப்பு பற்றி சொல்லுங்கள்?
போலிச்செய்தி பரவும் வேகம், அதன் சதவீதம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. நோய் பாதிப்பு தொடங்கிய ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 3 முதல் 60 போலிச்செய்திகள் வரை உருவாக்கப்பட்டு பல்வேறு சமூக வலைத்தளங்கள் வழியாக பரவி வருகின்றன. இவை மூன்று வகையாக உருவாக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் மதம், கலாசாரம். இரண்டு, அரசுகளின் செயல்பாடு, நடவடிக்கை, மூன்றாவதாக, குணமாவது, சிகிச்சை தொடர்பாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. வைரஸை சீனாவைத் தொடர்புபடுத்தி பேசுவது, இறைச்சி சாப்பிடுபவர்களை தூற்றுவது, தப்ளிக் ஜமாத் மாநாட்டையும் இஸ்லாமியர்களையும் வைரஸ் தொற்றுக்கு காரணம் என்று பேசுவது ஆகியவை போலிச்செய்திகளில் முக்கியமானவை. முஸ்லிம்கள்தான் வைரஸ் பரவலுக்கு காரணம் என்ற போலிச்செய்தியை ஏறத்தாழ அனைத்து மக்களும் ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டனர் என்பது அதிர்ச்சிகரமான எதிர்வினை ஆகும். தங்களது பிரச்னைக்கு பிறர்தான் காரணம் என்ற புகார் சொல்ல மக்கள் தயாராகி வருவது ஆபத்தான அறிகுறி.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏப்ரல் 26, 2020
ஆங்கிலத்தில்: சோனம் ஜோஷி
கருத்துகள்
கருத்துரையிடுக