இடுகைகள்

மெலடோனின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு! - என்ன செய்யலாம்?

படம்
        தூக்கத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன் போன்களை எந்த நேரத்தில் பயன்படுத்துவது என்பதை வரையறை செய்துகொள்ளலாம். இதற்கென ஆப்கள் சந்தையில் கிடைக்கின்றன. போனைப் பயன்படுத்தும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில உடற்பயிற்சிகளை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக நேரம் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை வாசித்து நிலைமையைப் புரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட்போன்களில் வெல்பீயிங் என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. அதை சோதித்தால் எவ்வளவு நேரம் எந்த ஆப்பை பயன்படுத்தினோம் என்ற தகவலைப் பெறலாம். போனை அணைத்துவைத்துவிட்டு குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழே விளம்பரம் செய்து வருகிறது. உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம். வீட்டு வேலைகளைச் செய்யலாம். இனி தூக்கம் பற்றி அறையை இருட்டாக்கி, அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சற்று குளுமையாக இருப்பது கூடுதல் நன்மை தரும். அப்போது தூக்கம் வருவது எளிதாக இருக்கும். தூங்கும்போது, சற்று முன்னதாக படுக்கைக்கு வந்து உடலை நீட்டி நெகிழ்த்தி தி...