இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

new book for muruganantham

படம்

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது ஆளுமைகளின்          கடிதங்கள் இரா.முருகானந்தத்திற்கு எழுதியவை காப்புரிமை: இரா.முருகானந்தம்               All Rights Reserved. வலைப்பூவடிவ பதிப்பு உரிமை : ஆரா பிரஸ் நூல்தொகுப்பு: ஷான் ஜே, ஜோஸஃபின் ஆசிரியரின் அனுமதி பெற்று பிரசுரிக்கப்படுகிறது. வாசிக்கலாம் ஆனால் வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. சுந்தர ராமசாமி                                            18.09.2001 அன்புள்ள திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு,      வணக்கம். உங்கள் 15.08.2001 கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உடல்நலம் சற்றுக்குறைவாக இருந்ததால் பதிலெழுதப் பிந்தி விட்டது. மன்னியுங்கள்.      இன்னும் ஐந்தாறு மாதங்கள் நான் இங்குதான் இருப்பேன். வசதி இருக்கும்போது நீங்கள் வரலாம். நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வருவதால் வருவதற்கு முன் தொலைபேசித்தொடர்பு கொண்டு என் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.(என் தொலைபேசி எண்: 223159) என்னை சந்திக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை அதிகம் அசௌகரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. இந்தப்பக்கம் வர நேர்ந்தால் அவசியம் இங்க