விபத்துகளைத்தடுக்க ஒருங்கிணைந்த அரசு துறைகளின் முயற்சி தேவை

விபத்துகளைத்தடுக்க ஒருங்கிணைந்த அரசு துறைகளின் முயற்சி தேவை

          -சம்ஹதி மொஹபத்ரா

              தமிழில்: ஹன்சா

      ப்யூஷ் திவாரி சேவ்லைப் எனும் அமைப்பு மூலமாக சாலைகளில் நடைபெறும் விபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும் முயற்சித்து வருகிறார்.

      தன் தம்பி வாகனம் மோதி துரதிர்ஷ்டவசமாக எந்த முதலுதவியும் கிடைக்காமல் இறந்துபோன செய்திதான் ப்யூஷ்திவாரியை தட்டி எழுப்பியது. மாநிலத்தில் பெரும் போதாமையாக, பற்றாக்குறையாக இருந்த முதலுதவி சிகிச்சை முறைகள் தான் திவாரிக்கு தான் செயல்படவேண்டிய திசை, நோக்கம் குறித்து புரியவைக்க உதவியது.

      ‘’என் தம்பிக்கு பதினாறு வயதுதான் இருக்கும். ரத்தம் சொட்ட கீழே கிடந்தவனுக்கு முதலுதவி செய்யக்கூட யாரும் பக்கத்தில் வரவில்லை. அவனைக் காப்பாற்றும் உதவி வேண்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை வற்புறுத்தி அழைக்கவேண்டி இருந்தது.’’ என்று கூறும் திவாரி அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தபின் 2008 ல் தன் தம்பியின் மரணத்திற்குப் பின் ‘சேவ் லைப்’ அமைப்பினை லாபநோக்கமற்ற அமைப்பாக தொடங்கினார்.

இந்த அமைப்பு மூலமாக சாலைவிபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு சாலை விபத்து விதிகளில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கும் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
      சேவ்லைப் அமைப்பின் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பணி, விபத்துகளைத்தடுக்க உயிரிழப்பைத் தடுக்க செய்த சிறப்பான பணிகளுக்காக அங்கீகாரமாக 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற விருதினை ராக்பெல்லர் மற்றும் எடெல்கிவ் அமைப்புகள் வழங்கி கௌரவித்துள்ளது. சிறந்த அமைப்பிற்கான ரோலக்ஸ் விருதினையும், அசோகா எனும் நிறுவனத்தில் தோழமையிலான பதவி(2013) உட்பட பல வெற்றிமாலைகளை திவாரி தன் அர்ப்பணிப்பான சேவைகளின் மூலம் பெற்றுள்ளார்.

      ‘’ முதலில் எங்களுடைய திட்டம் விபத்தில் காயமடைபவர்களை அவர்களின் அருகில் உள்ளவர்கள்; விபத்தினை காண்பவர்கள் காப்பாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் விதமாக இருந்தது. 50%  விழுக்காடு விபத்து காரணமான இறப்புகள் முதலுதவி கிடைக்காமல் நேருகிறது. விபத்தினை காண்பவர்களுக்கு பயிற்சியளிப்பதைவிட காவல்துறையினருக்கு பயிற்சியளிப்பது என்பது, பார்வையாளர்கள் சட்டச்சிக்கலுக்கு பயப்படும்போது சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற காவல்துறை தவிர வேறு யாரும் முதலுதவி தர முடியாது என்பதை உணர்ந்தோம் ’’ என்கிறார் திவாரி.

      ‘’ அவசர சிகிச்சை வண்டி ஒன்று மட்டும் போதுமானதல்ல, உயிர்காக்கும் கருவிகளைக் கொண்ட, பயிற்சி பெற்ற முறையான பணியாளர்கள் இருந்தால் மட்டும் சிக்கலான தருணங்களில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது பற்றி யோசிக்கவாவது முடியும் ’’ என்கிறார் திவாரி. உலகிலேயே ஒரு மணிநேரத்திற்கு எட்டு சாலை விபத்துகள் என்ற அளவில் இந்தியா தன்னை மேலே உயர்த்திக்கொண்டுள்ளது. சாலையில் கவனம் இல்லாது நடந்துகொள்ளுதல், வாகன உரிமம் பெறுவதில் சீர்கேடுகள், போதிய கல்வி அறிவு இல்லாத ஓட்டுநர்கள், சாலைவிதிகளை முறையாக அமல்படுத்தாத தன்மை, மோசமான சாலைகள் உருவாக்கம், வாகனங்களின் விரக்தி கொள்ளும் இயந்திர தொழில்நுட்ப இயக்கம் , விபத்தில்  காயம்பட்டவர்களை காப்பாற்ற உபகரணங்கள் போதாமை என்று பல்வேறு காரணங்களை திவாரி சுட்டிக்காட்டுகிறார்.

      இக்குறைபாடுகளை அரசுத்துறைகளான காவல்துறை, மாவட்டபோக்குவரத்துதுறை அலுவலகம், உடல்நலம் உள்ளிட்டவற்றுக்கு அடையாளம் காட்டி இணைந்து செயல்படுகிறோம். வெளிநாடுகளில் இந்த துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது மோசமான செயல்பாடுகளினால் ஆண்டிற்கு இருபது பில்லியன் டாலர்கள் வருமான இழப்பு ஏற்படுகிறது என்கிற தன் கவலையை தெரிவித்தவர், 2014 ஆம் ஆண்டில் அமல்படுத்த இருக்கும் சாலைப்பாதுகாப்பு சட்டம்(2014) குறைபாடுகளை தீர்க்க உதவக்கூடும் என்று தன் நம்பிக்கையை பகிர்ந்துகொள்கிறார்.

      நியூ டெல்லி, மகராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் என்று செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு உலகவங்கி, டபிள்யூஹெச்ஓ,  உலக சாலைப்பாதுகாப்பு பங்குதாரர் திட்டம், ஹார்வர்டு மருத்துவப்பள்ளி, மஹிந்திரா நிறுவனம் என்று பலரும் அனுசரணை வழங்கி வருகிறார்கள். காவல்துறையினருக்கு ஜீவன் ரக்ஸக்  எனும் திட்டத்தின் மூலம் 6500 நபர்களுக்கு மூன்று ஆண்டுகளாக அவசர சிகிச்சை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சிக்கலான உயிராபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றும் மூன்று யுக்திகளைக் கொண்டது.

      சேவ்லைப் அமைப்பு விபத்துகள் தற்காப்பு பயிற்சி(ADAPT) எனும் சான்றிதழ் வழங்கும் பயிற்சி ஜார்கண்ட், ஃபரிதாபாத், குஜராத் மாநிலங்களைச்சேர்ந்த கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய கல்வியையும் அளிக்க முயற்சித்து செயல்படுகிறது.

      சேவ்லைப் அமைப்பு தற்கால மோட்டார் வாகன சட்டத்திலுள்ள ஓட்டைகள் குறித்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. 1988, மத்திய மோட்டார் வாகனச்சட்டம் 1989ல் கனரக வாகனங்களில் இரும்புக்கம்பிகளை ஆபத்தான முறையில் ஏற்றிச்செல்வதால் ஆண்டிற்கு 9000 இறப்புகள் ஏற்படுகின்றன என்பதைக்கண்டறிந்து அதில் திருத்தங்களை ஏற்படுத்தி அவ்வாகனங்களை முறைப்படுத்த முயற்சித்து வருகிறது.

                        நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (19.9.2014)


கருத்துகள்