இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள் இயற்கைச் சூழல் ஞானம்

இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள்

இயற்கைச் சூழல் ஞானம்
    நாம் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. நாம் இயற்கையின் பிரிக்கமுடியாத பகுதியே என்பதை உணர்வோம். நாம் வாழும் பூமியின் இயற்கைச் சமன்நிலையைக் காப்பதும், இயற்கைச் சூழலுள் வாழ்வதும், நம்மிடமுள்ள இயற்கை வளங்களுக்குள் வாழ்வைக் கற்போம். நாம் தாக்குப்பிடிக்கும் சமூகத்தை, தனது மூலவளங்களை நாம் மட்டுமின்றி, எதிர்கால வாரிசுகளும் குறைவின்றி பெற்றுப்பயன் பெறும் வகையில் அளவுடனும், கவனத்துடனும் பயன்படுத்தும் சமுதாயத்தை விட்டுச் செல்வோம். இதற்கு ஏற்ற மண்ணைச் சாரமிழக்கச் செய்யாத வேளாண்மையை, ஆற்றல் ஊதாரித்தனமற்ற, சிக்கனமான பொருளாதாரத்தை இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் மதிப்பு கூடிவாழும் சமுதாயத்தை அமைப்போம்.
அடிமட்ட ஜனநாயகம்
    தன் வாழ்வைப் பாதிக்கும் எதைப்பற்றியும், தனது கருத்தைத் தயக்கமின்றிக் கூறும் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதனும் பெறத்தகுதி பெற்றவனாவான். யாருடைய கருத்தையும் எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. மக்கள் பங்கேற்பு, பங்களிப்பை அரசின் அனைத்து நிலைகளிலும் வளர்க்க முயல்வோம். மக்கள் பிரதிநிதிகளாகத்  தேர்ந்தெடுக்கப்படுவோர், தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக்குவோம். புதிய அரசியல் அமைப்பை மக்கள் பங்கேற்பு ஜனநாயக முறையை மக்கள் முடிவுகளை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக வடிவமைப்போம்.

சமவாய்ப்பும் சமநீதியும்
    சமுதாயமும், இயற்கையும் வழங்கும் அனைத்து வளங்களையும் ,வாய்ப்புகளையும் அனைத்து மக்களும் சமமாகப் பெற்று பயன்பெறும் உரிமையும், தகுதியும் உண்டு. இவற்றைப்பெற ஜாதி, மதம், இனம் வர்க்கம், அடக்குமுறை, பாலியல், முதுமை, பிறவிக்குறைபாடுகள் என்று எவ்வித வேறுபாடுகளும் காட்டக்கூடாது என்பதை மனசாட்சியுடன் நமக்குள்ளும், பிற அமைப்புகளிலும் நிலைநாட்டவும் உரிமை மறுப்பை எதிர்த்து நியாயமான நடத்துதலை, சமநீதியை, சட்டவழியில் நிலை நாட்டிட வேண்டும்.
வன்முறை மறுக்கும் அகிம்சை
    நமது குடும்பங்களிலும், சமுதாயங்களிலும், நாடுகளிலும் உலகம் முழுவதும் நிலவி வரும் வன்முறை வெளிப்பாடுகளுக்கு மாற்றான அன்புநெறியை உருவாக்க வேண்டும். நமது சமூகத்தை ராணுவத்தின் மற்றதாக, மாற்ற வேண்டும். பேரழிவு ஆயுதங்களை அரசிற்கு எதிர்மறை உணர்வு உண்டாகாது ஒழிக்க முன்வர வேண்டும். தற்பாதுகாப்பின் தேவையையும், பலவீனர்களின் பாதுகாப்பின் தேவையையும் நாம் நன்கு உணர்வோம். நாம் ஏற்காத, எதிர்க்கும் கருத்துக்களையும், கொள்கைகளையும் வன்முறையற்ற வழியில் எதிர்த்துப் பயில்வோம். தனிநபர், சமூக, உலக அமைதியை நீடித்து நிலைக்கச் செய்ய செயல்படுவோம்.
குவியல் தவிர்த்த பரவல் முறை
    ஒரு மையத்தில் குவியும் அதிகாரம், செல்வம், ஆகியன பொருளாதார அநீதிக்கும், இயற்கைச் சூழல் அழிவுக்கும், வன்முறை வளர்க்கும் ராணுவமயத்திற்கும் வித்திடுகிறது. எனவே சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளை, மறு வடிவமைக்கவும் சிலர் பயனடையவும், சிலர் பலம் பெறவும், சிலர் ஆட்சி செய்யவுமான அமைப்பை மாற்றி, குறைவான அதிகாரம் கொண்ட, ஜனநாயக பரவல் அமைப்பை உருவாக்குவோம். முடிவெடுப்பது, முடிந்தவரை, உள்ளூர் அளவிலும், தனிநபர் கைகளிலும், இருக்கவும், மக்களுக்கு அனைத்து சமூக உரிமைகளையும் பாதுகாத்து கிடைக்கச் செய்வதும் அவசியம்.
சமூகம் சார்ந்த பொருளாதாரம்
    வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய, அனைத்து மக்களுக்கும் நல்ல தரமான வாழ்வை வழங்கும், அதே வேளையில் இயற்கை சமன்நிலையை காக்கவும், மேம்படுத்தவுமான உயிர்த்துடிப்புள்ள, தாக்குப்பிடிக்கும் பொருளாதார அமைப்பை உருவாக்குவது அவசியம் என ஏற்கிறோம். நல்ல வெற்றிகரமான பொருளாதாரமென்பது கண்ணியமான, அர்த்தமுள்ள வேலை வாய்ப்பை வழங்கவும் வாழ்வுக்கேற்ற  மனித உழைப்பை மதிக்கும் நல்ல கூலியையும் வெற்றிகரமான பொருளாதார அமைப்பு வழங்க வேண்டும். உள்ளூர் சமூகம் பொருளாதார வளர்ச்சியை இயற்கை சூழலைப் பாதுகாக்கும், தொழிலாளர் உரிமைகளைப் போற்றும், திட்டமிடலில் மக்கள் பங்கேற்பை வரவேற்கும். மக்கள் வாழ்வுத்தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எதிர்கொள்வதாக அமைய வேண்டும். தனியார் உடமையில் நிர்வகிக்கும் நிறுவனங்களை, சமூக பொறுப்புடன் கூட்டுறவாக பொதுமக்கள் ஆதரவுடன் நடப்பதையும் இயற்கை வளங்களை மதித்து, மக்களின் ஜனநாயக பங்கேற்புடன் நடப்பதை ஆதரித்து, வரவேற்கிறோம்.
பெண்ணியம்
    நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தை உருவாக்கியுள்ளோம். அரசியல், பொருளாதாரம், சமூகம் முழுவதும் ஆணாதிக்கத்திலேயே உள்ளன. இந்த மேலாதிக்கத்தை மாற்றி, கூட்டுறவு, பகிர்வு வேற்றுமைகளை மதித்தல் போன்றவற்றால் மாற்றியமைக்க முயல்கிறோம். பாலின சமத்துவம், மனித உறவுகள், கௌரவம் போன்றவற்றை அறவுணர்வுடன் வளர்த்த விரும்புகிறோம். நமது எண்ணங்களும் முடிவுகளும் நமது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
பன்முகத்தன்மையை மதித்தல்
    பல்வேறு பண்பாடுகள், இனங்கள், பாலினம், மதங்கள், ஜாதி வேறுபாடுகளை மதித்து அவற்றின் மேம்பாட்டுக்கு உதவுவது அவசியம். சமுதாயத்தின் பலதரப்பட்ட எண்ணங்களும் நமது அமைப்பில் இடம் பெறவும், முடிவெடுப்பில் பங்கு பெறவும் வேண்டும். தலைமையிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களை நாம் ஆதரித்து தலைமை தாங்க வாய்ப்பளிக்க வேண்டும். நாம் அனைத்து உயிரினங்களையும் மதித்து, இயற்கையின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க முன்னிற்போம்.
தனிநபர், உலகப்பொறுப்புகள்
    மனிதர்கள் தமது தனிநபர் நலன்களை மேம்படுத்திக் கொள்ளவும், சமூக நல்லுறவு, இயற்கைச் சமன்நிலை ஆகியவற்றை மேம்படுத்தவும் ஊக்குவிப்போம். சமாதானம், பொருளாதார சமத்துவம், சமநீதி, பூமிப்பந்தின் நன்னிலை வளர்த்தும் அனைத்து மக்களுடனும், அமைப்புகளுடனும் நட்பு கொண்டு செயல்படுவோம்.
எதிர்காலமும் அதன் நிலைத்த தன்மையும்
    நாம் நீண்ட கால லட்சியத்துடன் சிந்திக்கவும், செயல்படவும் முயல்வோம். நாம் இயற்கையில் விலைமதிப்பற்ற வளங்களைப் பாதுகாக்கவும், நாம் உருவாக்கிய கழிவுகளைச் சரியான முறையில் கையாளவும் முயல்வோம். நிலைத்த, தாக்குப்பிடிக்கும் வளர்ச்சி, தொடர்ந்த முடிவற்ற விரிவாக்கத்தால் வாழ்விழந்து போகாது தடுப்போம். இதை எதிர்கொள்ளும் வகையில் குறுகிய லாபவெறி கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கான புதிய தொழில்நுட்பங்கள், பொருளாதாரக் கொள்கைகள், இந்த உலகின் வாரிசுகளான நாளைய தலைமுறை நமது செயல்பாடுகளால் அழியாது தடுப்போம். எமது லட்சியம் பிழைத்து வாழ்வதல்ல, ஒரு தரமான நல்வாழ்வை  மதிப்புடன் உண்மையுடன் வாழ்வதே. நமது வாழ்வின் தரம் நம் அனைவரின் வாழ்வின் தரத்துடன் இணைந்ததே என நம்புகிறோம். வாழ்வின் சிறப்பையும் மதிப்பையும் ஒவ்வொருவருமே உணரவும், புரிந்து கொள்ளவும், போற்றவும் நமது சமுதாயத்தின் உலகின் மகத்தான அழகை ரசிக்கவுமான உணர்வை ஊக்குவித்து வளர்ப்போம். பூமியை நேசித்து வாழ்விக்க அனைவரையும் தூண்டுவோம்.


கருத்துகள்