தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !
பூட் சவுண்ட் சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ் மலையாளம் பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது. கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப...