இடுகைகள்

ஆன்மிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்னால் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்! - பெரிதாகவே சிந்தியுங்கள் - ரியோ ஒகாவா

படம்
  ரியோ ஒகாவா, எழுத்தாளர்,ஆன்மிக தலைவர் பெரிதாக சிந்தியுங்கள் ரியோ ஒகாவா ஜெய்ஹோ பதிப்பகம் பக்கம் 135   ஹேப்பி சயின்ஸ் என்ற ஜப்பானின் மிகப்பெரும் ஆன்மிக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ரியோ ஒகாவா எழுதியுள்ள நூல். இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை நாம் எழுதிக்கொண்டிருக்கும்போது , அவர் கோஸ்ட் ரைட்டர்களை வைத்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக்கொண்டிருப்பார். இந்த நூலிலேயே 1,600 நூல்கள் எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.   அப்படியான நூல்களில் ஒன்றுதான் இது. தமிழில் எஸ் ராமன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பில் குறை காண ஏதுமில்லை. நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. சிறு சிறு கட்டுரைகளாக எழுதப்பட்டிருப்பது நல்ல ஐடியா. நூலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக்கொண்டால் நல்லது. ரியோ ஒகாவா, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதை வாசகர்களுக்கு சொல்லும் அறிவுரையாக மாற்றிக்கொள்கிறார். குறிப்பாக, பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்கள், வரையறைப்படுத்தல் என்பதை தனது சிறுவயது வாழ்க்கை, ஐக்யூ டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை வைத்து விளக்கியிர

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவ

அடியாட்களின் ரத்தம் கொட்டும் ரணகள வேலைகளுக்கு இடையில் ஆன்மிக உரையாடல்! பல்ப் ஃபிக்ஷன் 1994- குவான்டின் டரன்டினோ

படம்
  பல்ப் ஃபிக்ஷன் குவான்டின் டரன்டினாவோ ஜான் டிரவோல்டா, சாமுவேல் ஜாக்சன், ப்ரூஸ் வில்லிஸ், டிம் ரோத் பல்ப் ஃபிக்சன் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்களை படத்தில் தொடக்கத்திலேயே கொடுத்து விடுகிறார்கள். அதை படித்துவிட்டு படம் பார்த்தால் உங்களுக்கே கான்செப்ட் புரிந்துவிடும்.  படத்தின் தொடக்கத்தில் உணவகத்தில் அமர்ந்து ரிங்கோ வும் அவனது காதலியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது உரையாடல் வழியே அவர்கள் பார், கிளப் என கொள்ளையடித்து பிழைப்பை ஓட்டுபவர்கள் என்று தெரிகிறது. சாப்பிடும் உணவகத்தில் திருடலாமா என ரிங்கோ கேட்க, காதலியும் சரி என்கிறாள். உடனே படத்தின் டைட்டில் கார்ட் ஓடத் தொடங்குகிறது.  படம் பிளாக் காமெடி கொண்டது. படத்தில் வரும் ஜூல், வின்சென்ட் வேகா, மியா, மார்செலஸ் ஆகியோர் அவர்களது வேலையை சீரியசாக செய்கிறார்கள். ஆனால் பார்க்கும் நமக்கு சிரிப்பை அடக்க முடியாது. அப்படியான காமெடிதான் படம் நெடுக உள்ளது.  ஜூல்ஸ் கடவுள் நம்பிக்கை கொண்டவன். செய்யும் தொழில் காசுக்கு கொலை செய்வதுதான். இவனுக்கும் நண்பன் வின்சென்ட் வேகாவுக்கும் வேலை கொடுப்பது, ஆப்பிரிக்க அமெரிக்க பாஸ், மார்செலஸ். அவரிடம் ஏமாற்றி

இந்தியர்கள் அன்பான தொடுதலை அறியாதவர்கள்! - அய்லி சேகட்டி

படம்
  அய்லி சேகட்டி காதல் உறவுக்கான பயிற்சியாளர்  நீங்கள் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தானே? இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? இங்கு நீங்கள் காதல் உறவுக்கான பயிற்சியையும் வழங்குகிறீர்கள் நான் பின்லாந்து, இத்தாலி, லண்டனில் வாழ்ந்துள்ளேன். எனது பதினெட்டு வயதிலேயே லண்டனுக்கு சென்றுவிட்டேன். பிறகுதான் இந்திய தத்துவங்கள் மீது ஆர்வம் பிறந்தது. மதரீதியான படிப்புகளை படிப்பையும், இந்தி மொழியையும் கற்றேன். பிறகுதான் 2007இல் மும்பைக்கு சென்றேன். பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிலை பற்றிய ஆராய்ச்சி செய்தேன். கூடவே, சோமாட்டிகா எனும் படிப்பைப் படித்தேன். சைக்கோதெரபி, விபாசனா ஆகியவற்றைப் பற்றி ஆழமாக கற்றேன். இதற்குப் பிறகு எனக்கு மணமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணவாழ்க்கை கெட்டுப்போனது. எனவே, நான் எங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன் வைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் காதல் உறவு பயிற்சியாளராக மாறினேன்.  2012இல் உலகம் முழுக்க டேட்டிங் ஆப்களின் மீதான மோகம் பெருகத் தொடங்கியது. நானும் பிஏ இந்தி படிப்பை கைவிட்டு பாலுறவு மற்றும் காதல் உறவு பற்றிய ஆராய்ச்சிக்கு மாறினேன்.  இந்தியர்கள் தங்கள் உறவில் எந்த

ஆன்மிக உள்ளொளி கொண்ட இந்தியா - நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ

படம்
  நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ படம் - பனுவல் நான் நேசிக்கும் இந்தியா ஓஷோ கண்ணதாசன் பதிப்பகம் ரூ.75 பொதுவாக இந்தியா பற்றி மேற்குல ஆராய்ச்சியாளர்கள் சுற்றுலா பயணிகள் மனதில் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய கருத்துகள் தவறு என்று கூறி அதற்கான பல்வேறு தகவல்களை ஓஷோ முன்வைத்து பேசியுள்ள நூல்தான் நான் நேசிக்கும் இந்தியா.  இந்தியாவை ஒருவர் எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது என பல்வேறு விஷயங்களை  நூலில் எளிமையாக சொல்லிச் செல்கிறார். இதன் தன்மை நாம் ஊழல், ஒழுங்கின்மை, அழுக்கு என்று சொல்லும் தேசத்தின் அடிப்படை என்னவென்று புரிந்துகொள்ள உதவுகிறது.  இதில் நிறைய சிறு குறு கதைகள் உள்ளன. அவற்றில் சுவேதகேது பற்றிய கதை முக்கியமானது. கல்வி என்பது என்ன என்பதை இந்தியாவிலும் மேற்குலகிலும் வேறுமாதிரி பார்க்கின்றனர். எது கல்வி என்பதை அவர் குரு மூலம் கற்றுக்கொடுக்க முடியாத கல்வியை அறியும் இடம் அற்புதமானது.  இன்னொரு கதை பலரும் அறிந்ததுதான். அக்பரின் அவையில் இருந்த தான்சேன் என்ற இசைக்கலைஞரைப் பற்றியது. யாருடைய இசை உயர்ந்தது என்று பேசும்போது தான்சேன் எந்த ஆணவமுமில்லாமல், தனது குரு ஹரிதாசரின் இசைதான் உ

மனதை நிறைக்கும் ஆன்மிக அனுபவ பயணம்! - அருகர்களின் பாதை- ஜெயமோகன்

படம்
  சமணர்களின் கோவில் - ஜெயமோகன் வலைத்தளம் அருகர்களின் பாதை ஜெயமோகன் கிழக்கு  ரூ.285 (ராயப்பேட்டையிலுள்ள கிழக்கு பதிப்பகமே சென்று வாங்கினாலும் கூட ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டோம் என அன்போடு சொல்லிவிட்டனர்.) நூல் முழுக்க சமண வழிபாட்டிடங்களை தேடிச்செல்லும் எட்டுபேர் கொண்ட குழுவின் பயணத்தைப் பற்றியது. இதில் வரும் ஆரியர் வருகை, நாற்கர சாலை ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு பார்த்தால் நூல் முழுக்க பயணம் தொடர்பான செறிவான கருத்துகள் நிரம்பியுள்ளது என உறுதியாக கூறலாம்.  தொன்மைக் காலம் தொடங்கி இன்றுவரை சமண வழிபாட்டிடங்கள் வளர்ந்துகொண்டே வருகின்றன. கூடுதலாக அந்த மதம் சார்ந்தவர்கள் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கோவில்களை வெண் சலவைக்கல் கொண்டு கட்டிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக  கல்யாண்ஜி எனும் அமைப்பைச் சொல்லலாம். ஜெயமோகன் தன்னுடைய நண்பர்களோடு செல்லும் இடங்களில் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் சமண தர்மசாலையினர்தான். இந்து மத அமைப்பினர் அல்ல. இது பற்றிய இடம் வரும்போது, ராமகிருஷ்ண மடத்தின் அணுகுமுறை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார் ஜெ. என்ன நோக்கம் என்பதே தெரியாமல் மடத்தை நிர்வாகம் செய்பவர

சித்தா சமாஜின் கம்யூன் லைஃப்!

படம்
சித்தா சமாஜின் கம்யூன் லைஃப் ! - ச . அன்பரசு இந்தியாவில் ஆன்மிக ஆனந்தத்தை பெறவும் கர்மங்களை கரைத்து வீடு பேறு அடைவதற்கான லட்சியத்தை அடைய பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மடாலயங்கள் முன்னர் தொடங்கப்பட்டன . இன்று அவற்றில் மிகச்சிலவே இயங்கிவருகின்றன . கேரளாவின் கோழிக்கோட்டிலுள்ள வடகரையில் இயங்கிவரும் சித்தா சமாஜமும் அதில் ஒன்று . இன்றும் மக்களின் ஆதரவுடன் முந்நூறுக்கும் மேற்பட்ட துறவிகள் ஆன்மிக வாழ்க்கையை லயம் பிறழாமல் வாழ்ந்து வருகின்றனர் . கேரளாவில் நான்கு , தமிழ்நாட்டில் ஒன்று என கிளைகளைக் கொண்ட சித்தா சமாஜத்தில் அப்படியென்ன ஸ்பெஷல் ? ஜாதி , மதம் , கடவுள் பின்பற்றும் நெருக்கடி கிடையாது என்பதோடு விருப்பத்தேர்வான பாலுறவும் சமாஜத்தின் வாழ்வில் முக்கிய அம்சம் . இறைவனை அடையும் லட்சியத்தில் ஆணிவேர் போல உறுதியாக உள்ள துறவிகள் தாங்கள் பங்கேற்கும் ஸ்பெஷல் பிரார்த்தனை கூட்டத்தில் நிர்வாணமாக பங்கேற்கிறார்கள் . பொதுவான சமூகத்தில் மாற்று சமுதாயமாக மலர்ந்துள்ள சித்தா சமாஜ துறவிகளை இ . எம் . எஸ் . நம்பூதிரிபாட் , தொன்மையான கம்யூனிஸ்ட்டுகள் என குறிப்பிட்டுள்ளார் . சமாஜத்தின் டிச