அடியாட்களின் ரத்தம் கொட்டும் ரணகள வேலைகளுக்கு இடையில் ஆன்மிக உரையாடல்! பல்ப் ஃபிக்ஷன் 1994- குவான்டின் டரன்டினோ

 










பல்ப் ஃபிக்ஷன்
குவான்டின் டரன்டினாவோ
ஜான் டிரவோல்டா, சாமுவேல் ஜாக்சன், ப்ரூஸ் வில்லிஸ், டிம் ரோத்







பல்ப் ஃபிக்சன் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்களை படத்தில் தொடக்கத்திலேயே கொடுத்து விடுகிறார்கள். அதை படித்துவிட்டு படம் பார்த்தால் உங்களுக்கே கான்செப்ட் புரிந்துவிடும். 

படத்தின் தொடக்கத்தில் உணவகத்தில் அமர்ந்து ரிங்கோ வும் அவனது காதலியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது உரையாடல் வழியே அவர்கள் பார், கிளப் என கொள்ளையடித்து பிழைப்பை ஓட்டுபவர்கள் என்று தெரிகிறது. சாப்பிடும் உணவகத்தில் திருடலாமா என ரிங்கோ கேட்க, காதலியும் சரி என்கிறாள். உடனே படத்தின் டைட்டில் கார்ட் ஓடத் தொடங்குகிறது. 

படம் பிளாக் காமெடி கொண்டது. படத்தில் வரும் ஜூல், வின்சென்ட் வேகா, மியா, மார்செலஸ் ஆகியோர் அவர்களது வேலையை சீரியசாக செய்கிறார்கள். ஆனால் பார்க்கும் நமக்கு சிரிப்பை அடக்க முடியாது. அப்படியான காமெடிதான் படம் நெடுக உள்ளது. 






ஜூல்ஸ் கடவுள் நம்பிக்கை கொண்டவன். செய்யும் தொழில் காசுக்கு கொலை செய்வதுதான். இவனுக்கும் நண்பன் வின்சென்ட் வேகாவுக்கும் வேலை கொடுப்பது, ஆப்பிரிக்க அமெரிக்க பாஸ், மார்செலஸ். அவரிடம் ஏமாற்றி திருடியவர்களை கொல்லத்தான் காரில் செல்கிறார்கள். போகும் வழியெங்கும் ஆன்மிகம், பாஸின் மனைவிக்கு பாதத்திற்கு மசாஜ் செய்வது, அப்படி செய்தவன் நான்காவது மாடியிலிருந்து தூக்கியெறியப்பட்டு கொல்லப்பட்டது என நிறைய விஷயங்களை பேசிக்கொண்டே செல்கிறார்கள். 

படம் நெடுக பல்வேறு பாத்திரங்கள் பேசும் உரையாடல் சுவாரசியமாக உள்ளது. உதாரணத்திற்கு புட்ச் தனது காதலியிடம் வட்டவடிவ வயிறு பற்றி உரையாடும் காட்சி. புட்ச் தப்பி வரும்போது அவனிடம் கார் ஓட்டும் டாக்சிப் பெண் ஒருவனைக் கொல்வது எப்படி உணர வைத்தது என பிஹைண்ட்வுட்ஸ் தனமாக கேள்விகளை கேட்பதும் அதற்கு அவன் பதில் சொல்லும் காட்சியும். உணவகத்தில் ஜூல்ஸூம், வின்சென்டும் உணவு பற்றி சீரியசாக பேசும் காட்சி என சொல்லிக்கொண்டே போகலாம். 

மாஃபியா தலைவர் மார்செலஸ், அவரது மனைவி மியா, மார்செலஸின் கூலிக்கொலையாட்கள் ஜூல்ஸ், வின்சென்ட், மார்செலஸின் வார்த்தைகளுக்கு ஏற்ப சண்டையிடும் குத்துச்சண்டை வீரன் புட்ச் ஆகியோரது வாழ்க்கைக் கதைதான் படமே. 

இதில் இயக்குநர் டரன்டினாவோவும் கூட ஜிம்மி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


வினோதரச மஞ்சரி 



நன்றி

அஷ்ரத் 



 





கருத்துகள்