வெப்பநிலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பவளப்பாறை!
வெப்பநிலையைத் தாங்கும் பவளப்பாறை!
உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒருபகுதி, பவளப் பாறைகளை வாழிடமாக கொண்டுள்ளன. 2100ஆம் ஆண்டு உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் என உயரும்போது பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. இதிலிருந்து பவளப் பாறைகளை காக்கும் முயற்சிதான் சூப்பர் பவளப் பாறைகளை (super coral)வளர்ப்பது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் மெடலின் வான் ஆப்பென், பவளப்பாறை வளர்ப்பு முயற்சியை, சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். அப்போது இவரின் முயற்சிகளுக்கு உயிரியலாளர் ரூத் கேட்ஸ் துணையாக இருந்தார். 2018இல் ரூத் காலமாகிவிட, மெடலின் தனது ஐடியாவை பிற ஆராய்ச்சிக் குழுவினரோடு பகிர்ந்துகொண்டு இயங்கி வருகிறார். பவளப்பாறைகளில் சிலவற்றை எடுத்து அதில் மரபணு மாற்றம் செய்கிறார்கள்.
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சில பவளப்பாறை இனங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வெப்பநிலையை தாங்கிக்கொள்ளும்படி மாறுதல்களை செய்ய முயன்று வருகிறார்கள். இந்த வகையில் சில இனங்களை கலப்பின முறையில் உருவாக்குகிறார்கள். ”பத்தாண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்ய நமக்கு நேரம் கிடையாது என்பதால், பவளப்பாறைகளை வேகமாக உருவாக்கும் முறையை கண்டுபிடித்தே ஆகவேண்டும் ” என எச்சரிக்கிறார் லண்டனில் உள்ள விலங்கியல் சங்கத்தைச் சேர்ந்த அறிவியலாளர் ஹீதர் கோல்டேவே.
bbc science focus specials
breeding tougher reefs
bbc science focus specials 5.12.2021
கருத்துகள்
கருத்துரையிடுக