இடுகைகள்

ஒளிமாசு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரங்களை அழிக்கும் ஒளி!

படம்
மரங்களை அழிக்கும் ஒளிவிளக்கு! உலகம் முழுக்க திருமணம், திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு மரங்களின் மீது சீரியல் பல்புகளை, ட்யூப்லைட்டுகளை கட்டுவது வழக்கம். ஆனால் இவை மரங்களை மெல்ல அழிக்கிறது என்பதை அறிவீர்களா? பகலில் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் தாவரங்கள், மரங்கள் சீரியல் விளக்குகளின் வெப்பம், ஒளி காரணமாக இரவு, பகல் வேறுபாட்டை உணரும் ஆற்றல் இழக்கின்றன. இதற்கு Photoperiodism என்று பெயர். தாவரங்களிலுள்ள பைட்டோகுரோம் அல்லது கிரிப்டோகுரோம் எனும் புரதங்கள் மாறும் காலச்சூழலை உணர்ந்து ஒளிச்சேர்க்கை வழியே உணவு தயாரிக்கின்றன. இடையறாத ஒளியால் இப்புரதங்கள் செயலிழந்து போவதோடு, பறவைகள், பூச்சிகளும் மெல்ல அவ்விடத்தை விட்டு வேறிடம் செல்லும் இக்கட்டு நேர்கிறது. சாலையில் செல்லும்போது மரங்களைச் சுற்றியுள்ள விளக்குகள் வாகன ஓட்டிகளின் கவனத்தையும் குலைத்து விபத்துக்கு காரணமாகின்றன. மேலும் சர்வீஸ் கனெக்‌ஷனுக்கு யூனிட்டிற்கு ரூ.12.10 ரூபாய் கட்டுவதை ஏமாற்றி ரூ.7-8 மட்டுமே கட்டுகின்றனர்.