இடுகைகள்

ஆல்பெர் காம்யூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரணதண்டனை எனும் சித்திரவதை- காம்யூ சொல்வது என்ன?

மரணதண்டனை என்றொரு குற்றம் ஆல்பெர் காம்யூ தமிழில் வி நடராஜ் பரிசல் ரூ.30 இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் மரணதண்டனை வழங்கப்பட்டுவருகிறது. இது அரிதாகவே நடக்கிறது என்றாலும் மரணதண்டனை பொதுமக்களின் கோபம் போக்க எனும் முகமூடியில் இந்த கொடூரம் நடைபெற்று வருகிறது. ஆல்பெர் காம்யூ பிரெஞ்சு நாடு, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கில்லட்டின் மூலம் நடைபெற்ற நிர்வாக முறை சார்ந்த மரணதண்டனைகளைப் பற்றி பேசி அது கூடாது என்று கூறுகிறார். நிறைய வாக்கியங்கள் நான்கு வரி சென்றாலும் முற்றுப்புள்ளியைக் காணோம். அது பரவாயில்லை. விஷயம் புரிந்துகொண்டால் போதும் என்பதால் வாசகர்கள் அதுகுறித்து கவலைப்பட மாட்டார்கள். 1930 களில் அமெரிக்காவில் நடந்த ஆய்வுகளில் மரணதண்டனையைக் கைவிட்ட நாடுகளில் குற்றம் என்பது பெரிதாக குறையவில்லை என்ற ஆய்வையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அதேநேரம், குற்றத்திற்கான தண்டனையை நினைத்து குற்றவாளிகள் எதையும் செய்யாமலும் இருக்கப்போவதில்லை எனபதையும் ஆசிரியர் கூறுகிறார். சமூகத்தின் போலி ஒழுக்கம் மரணதண்டனையை வலியுறுத்துகிறது என்கிற இவரது வாதம் மிக கூர்மையானது. காரணத்தை அழி