இடுகைகள்

144 தடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் பாதிப்பும் அரசு செய்யவேண்டியதும்!

படம்
வரும் மே 15க்குள் இந்தியாவில் கோவிட் -19 நோய் பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரம் முதல் 13 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்ன பிரச்னை? அடிப்படையே பிரச்னைதான். கழிவறைகளையே ஜென்ம சனி பிடித்தவனுக்கு ஏற்படும் சிரமங்களை ஒத்து கட்டுபவர்கள் மருத்துவமனை படுக்கைகளை மட்டும் வைத்திருப்போமா என்ன? இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு 07 சதவீத படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதுவே தென்கொரியாவில் பத்தாயிரம் பேர்களுக்கு 6 சதவீத படுக்கைகள் உள்ளன. இந்தியர்கள் கொரோனா பாதிப்பிற்கு முன்னதாகவே நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் கொரோனா தொற்றும்போது அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அரசு என்ன செய்யவேண்டும்? கோவிட் -19 நோய் பாதிப்பைக் கண்டறிய இலவச மையங்களை அமைக்கவேண்டும். அதற்கான சிகிச்சையும் விலையின்றி அளிக்க  முன்வரவேண்டும். மருத்துவமனை படுக்கைகளை அதிகரிக்கவேண்டும். மக்கள் கூடுமிடங்களை தடை செய்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்படி செய்யவேண்டும். மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்து கிடப்பதால், வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. இ

அரசும் தனியாரும் இணைந்து பணிபுரிய வேண்டும்!

படம்
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பத்து இத்தாலியர்களில் ஒருவர் குணமாகி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனை தலைவர் நரேஷ் திரேகானிடம் பேசினோம். அரசும் தனியாரும் இணைந்து மருத்துவத்துறையில் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறதே? கொரோனா போன்ற சூழல்களில் அரசிடம் கூட போதுமான படுக்கை வசதிகள், மருந்துகள், தங்கும் அறைகள் இருக்காது. இச்சூழலில் தனியாரின் மருத்துவ வசதிகளை அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். சரியான மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள், வெண்டிலேட்டர் ஆகியவை நம்மிடம் போதுமான அளவு இல்லை. கொள்ளைநோய் சிகிச்சைக்கான செலவும் அதிகம். எனவே, முடிந்தவரை நோய் யாருக்கும் அதிகம் பரவாமல் இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அதற்காகத்தான் அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இப்போது பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு சிகிச்சை செய்துள்ளீர்கள். இதிலிருந்து  பலருக்கும் சிகிச்சை செய்வதற்கான திறனை பெற்றுவிட்டீர்களா? நாங்கள் இப்போதுதான் இந்த நோயை சமாளிப்பதற்கான