இடுகைகள்

ஏழ்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதனை படைக்கும் வள்ளல் பணக்காரர்கள் ! வியட்நாம், ஜப்பான், ஹாங்காங் நாட்டு வள்ளல்கள்

படம்
          உலகம் புகழும் வள்ளல் பணக்காரர்கள் ! பாம் நாட் உவாங் வின் குழுமம் வியட்நாம் பாம் , 2006 ஆம் ஆண்டு கைண்ட் ஹார்ட் பௌண்டேஷனை உருவாக்கினர் . இந்த நிறுவனத்திற்கென 77 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளார் . இதன் மூலம் சிகிச்சை தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கும் மாணவர்களின் உதவித்தொகைக்கும் நிதியை வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் வீடுகளைக் கட்டுவது , மருத்துவ மையங்களை அமைப்பது . நூலகங்களை உருவாக்குவது என வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கென பல்வேறு செயல்பாடுகளை பாம் செய்துள்ளார் . இயற்கை பேரிடர்களுக்கு உதவுவதோடு , வின் குழுமம் கோவிட் -19 நிவாரணப்பணிகளுக்கும் 55 மில்லியன் டாலர்கள் அளவில் பல்வேறு கருவிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் . வின் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள பாம் , வாகனங்கள் தயாரிப்பு , ரியல் எஸ்டேட் , தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கிறார் . ததாசி யானாய் ஃபாஸ்ட் ரீடெய்லிங் ஜப்பான் இவரது நிறுவனம் யுனிக்யூ என்ற ஜவுளி பிராண்டை நடத்தி வருகிறது . இதில் கிடைக்கும் வருமானத்தில் 102 மில்லியன் டாலர்களை நாட்டின் பல்க்கலை

அரசியல்வாதிகளின் பின்னே நிற்காதீர்கள் - சேட்டன் பகத்

படம்
சேட்டன் பகத் -  2016 ஆம் ஆண்டு பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை எனக்கு அதிர்ச்சி தந்தது. காரணம், காங்கிரஸ் அரசின் தவறையே இந்த அரசும் செய்கிறதோ என்று எனக்குத் தோன்றியது. ஓய்வூதிய சேமிப்புகளுக்கு கூட வரி போடுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அரசுகள் வரி போடுவதால் என்ன பயன்? வருவாய் அதிகரிப்போது ஏழைகளை நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்களை மேல்தட்டுக்கும் நகர்த்துவதற்கான முயற்சிகளை செய்யமுடியும். ஆனால், அளவுக்கு அதிகமான வரி என மக்களை நினைக்க வைப்பது இதற்கு எதிர்மறையான விளைவைத் தரும். மும்பையில் ஒரு கஃபே செயல்படுகிறது என வைத்துக்கொள்வோம். அங்கு அருகிலுள்ள அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து டீ, காபி, ஸ்நாக்ஸ் என நொறுக்கி எறிகின்றனர். பில்லிலும் வரி உண்டு. அந்த அதிகாரிகளின் சம்பளத்திலும் வரி பிடித்தம் உண்டு. அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் கல்வி வரி உள்ளிட்டவை அடங்கும். மேலும், பெட்ரோல் டீசலும் முக்கியமான வரிகள் உண்டு. இப்போது வரி அதிகமாவதால் கூட்டம் குறைகிறது. கஃபே மூடிவிடுகிறார்கள் எனில் என்னாகும்? அங்கு வேலைவாய்ப்புகள் குறைகிறது என்று பொருள்