இடுகைகள்

கோமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது தவறுகளுக்கான விளைவை எதிர்கொள்ளும் பாப் பிஸ்வாஸ்! - பாப் பிஸ்வாஸ் - இந்தி

படம்
  பாப் பிஸ்வாஸ்  சுஜய் கோஸ் ஜீ5  பாப் பிஸ்வாஸ், என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கோமாவிலிருந்து எழுகிறார். அவருக்கு தனக்கு மனைவி இருக்கிறார். டீனேஜ் பெண் ஒருவர், பள்ளி செல்லும் சிறுவன் என இருவர் பிள்ளைகள் என்பதே அவருக்கு நினைவில் இல்லை. உண்மையில் அவர் யார், எதனால் அவருக்கு பழைய விஷயங்கள் மறந்து போயின் என்ற விஷயங்களை ரத்தம் தெறிக்க நாம் தெரிந்துகொள்வதுதான் பாப் பிஸ்வாஸின் முக்கியமான கதை.  2012 இல் வெளியான கஹானி படத்தில் வரும் பாத்திரம்தான் பாப் பிஸ்வாஸ். அவரைப் பற்றிய ஸ்பின் ஆப் படம்தான் பாப் பிஸ்வாஸ். இவர் எப்படி காவல்துறைக்கு ஆதரவாக கொலைகாரராக மாறினார் என்பதை படம் பேசுகிறது. அப்பாவியாக இருக்கும் அபிஷேக் எப்படி கொலை செய்யும் ஆளாக மாறுகிறார் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை யாருக்கும் எந்த பிரச்னையும் தராத  மனிதர். ஆனால் அவர்களுக்கு தெரியாத வாழ்க்கையில் அவர் கூலிக்கொலைகாரர். அதுவும் போதைமருந்தான ப்ளூ மாத்திரையை விற்கும் கும்பலுக்கும் காவல்துறைக்குமான சம்பந்தம் தெரியாதவர். அந்த விவகாரம் தெரிந்தபிறகு அவரது வாழ்க்கையில் இழப்புகள்தான் கூடுகின்றன.  அவருக்கு பின

எவரெஸ்டில் பயணிகள் இறப்பது ஏன்?

அண்மையில் எவரெஸ்டில் ஏறிய பலர் காயமுற்றும் இறந்தும் உள்ளனர். என்ன காரணம்? இந்த வாரம் மட்டும் ஏழுபேர் இறந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நிகால் பக்வான் என்பவரும் இந்த பட்டியலில் அடக்கம். முன்பை விட  சாதனைக்கான ஏக்கம் உலகில் அதிகரித்துள்ளது. எவரெஸ்டில் ஏறுவதற்கான காத்திருப்பு பனிரெண்டு மணிநேரமாக அதிகரித்துள்ளது. பனிரெண்டு மணிநேரம் காத்திருந்து நாங்கள் மேலே சென்றோம் என்கிறார் பிரான்ஸ் பிரெஸ்ஸே நிறுவனத்தைச் சேர்ந்த கேசவ் பாடெல். எவரெஸ்டில் ட்ராஃபிக் ஜாமா என்று நினைப்பீர்கள். உண்மைதான். இதில் ஒருவருக்கு ஆக்சிஜன் போதாமல் பிரச்னை ஏற்பட்டால் அவரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம். உலகின் உயரமான மலைத்தொடரான எவரெஸ்ட் 29 ஆயிரம் அடி கொண்டது. கடல்மட்டத்திற்கு மேல் உள்ள சிகரம் இது. மலையில் ஏறுபவர்கள் அங்கு சென்றதும், மூச்சுத்திணறலை உணர்வார்கள் என்கிறார் மருத்துவர் ஆண்ட்ரூ லூக்ஸ். இந்த பாதிப்பைப் போக்க டயாமோக்ஸ் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது டெக்ஸ்மெத்தோசோன் என்ற மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  மலையில் ஏறுபவர்களுக்கு ஹேஸ்  எனும் ஹை அல்டிடியூட் செரிபிரல் எடிமா பாதிப்ப