பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும்
பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும் மதவாத கட்சிக்கு வாக்களித்துவிட்டு சிறுபான்மையினரின் வீடு கோவில்களை புல்டோசர் இடிப்பதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போன்றதல்ல. ஒருவர், குறிப்பிட்ட பொருளை கடையில் வாங்கிவிட்டு அதன் மதிப்பை அதிகமாக கருதிக்கொள்வதுண்டு. சிலர் ஒருவர் வைத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொடுப்பதாக சொன்னாலும் சம்பந்தப்பட்டவர் அதெப்படி இதை நீ வெலைக்கு கேட்கலாம். எனக்கு பிடிச்ச பொருள். விற்கமாட்டேன் என்று கூறுவதுண்டு. சூதாட்டம் விளையாடுவதைக் கூட மனிதர்களின் முடிவு தொடர்புடையதாக சொல்லலாம். இன்று ஆன்லைன் ரம்மியை ஒன்றிய, மாநில அரசுகளே ஊக்குவிக்கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி குலுக்கல் நடைமுறையில் உள்ளது. இதில் எல்லாம் வெல்வது அரிதிலும் அரிதாக நடைபெறுவது. இதன் அர்த்தம் பெரும்பாலும் நடக்காது என்பதுதான். வானிலை ஆய்வு மையம், பகல் வெயில் பளிச்சென அடிக்கும் என்று அறிக்கை வெளியிடும் அன்றைக்கு அடைமழை பெய்வது போல்தான். எதையும் கணிக்க முடியாது. சந்தையில் பங்குகள் ஓகோவென உயரத்திற்கு செல்லும் என்று வணிக டிவி சேனல்கள் ஒப்பாரி வைக்கும். அந்த சமயம் பார்த்து ரூபாயின் ம...