ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்!
ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்! நீங்கள் வரலாற்றை வலதுசாரி,மதவாதப் பார்வையில் பார்க்க வேண்டுமா அதற்கு கீழேயுள்ள நூல்கள் பல்வேறு தகவல்களை வழங்கும். இந்துத்துவா பார்வையில் உலகைப் பார்க்க தொன்மை வரலாற்று நூல்கள் உதவும். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொன்மை இந்தியா அதாவது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் இருந்த வேதகாலம் எப்படி பொற்காலமாக இருந்தது என்பதை நூல்களாக எழுத மாணவர்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக இப்படியான எழுத்தாளர்கள்தான் நேஷனல் புக் டிரஸ்டில் வரலாற்று நூல்களை எழுதி வருகிறார்கள். என்பிடி ஒரு அரசு நிறுவனம், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனத்தை ஆர்எஸ்எஸ் ஆட்களை வைத்து வளைத்து வரலாற்றை திருத்தி எழுதி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களையும் வலதுசாரிகள் வாசித்தால் குறைந்தபட்சம், டிவி விவாதங்களிலாவது உருப்படியாக ஏதாவது பேசித்தொலைய வாய்ப்புண்டு. இந்த நூல்பட்டியலை பரிந்துரைத்தவர் புகழ்பெற்ற நாளிதழ் ஆசிரியர் ஒருவர். நாம் குறிப்பிட்ட பார்வையை கோணத்தை உறுதி செய்துகொண்டு எந்த ந...