போதைப்பொருள் கடத்தலில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி கால்டாக்சி டிரைவர்!
டாப் கியர் தெலுங்கு ஆதி, ரியா, மைம் கோபி போதை மாபியா குழுவின் விவகாரத்தில் கால் டாக்சி டிரைவர் சிக்கிக்கொள்கிறார். அவரது மனைவி உயிரைக் காப்பாற்ற போதைப்பொருளைக் கண்டுபிடிக்க செல்கிறார். இறுதியில் என்னவானது என்பதே கதை. படத்தில் காதல் காட்சி, நகைச்சுவை என எதுவும் கிடையாது. முழுக்க ஆக்சன் திரில்லராக எடுக்க நினைத்த இயக்குநர், அதை படத்தின் பாதியிலேயே மறந்துவிட்டார். நிறைய காட்சிகளில் பிஜிஎம் உறுமலோடு காட்சி மெதுவாக நகர்கிறது. எலிவேஷனுக்கு வெறும் இசை மட்டும் போதாது அல்லவா, காட்சியில் ஏதேனும் இருக்கவேண்டுமே? அப்படி ஏதும் இல்லை. நாயகன் டாக்சி டிரைவர். காதலித்து மனைவியை சார்பதிவாளர் அலுவலகத்தில் மணம் செய்கிறார். ஆனால், அவரின் கூட நிற்க எந்த நண்பர்களுமே இல்லை. அப்புறம் எப்படி சாட்சி கையெழுத்து போடுவது? இப்படியான லாஜிக் இடரல்கள் படம் நெடுக உண்டு. நேரடியாக கதைக்கு போகவேண்டும். எனவே, நாயகனுக்கு காதலி கிடையாது. மனைவி உண்டு. நாயகன், நாயகி தரப்பில் எந்த நண்பர்களும் இல்லை. ஏன், வீட்டில் கூட அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த செட்டப் ஒருவித செயற்கையான தன்மையை ஏற்படுத்துகிறது....