இடுகைகள்

கட்டணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருநிறுவனங்களின் அதீத வணிகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் உலக நாடுகள்!

படம்
  பெருநிறுவனங்களின் வணிக வெறி பெரு நிறுவனங்களை உலக நாடுகள் எதிர்க்க காரணம்! குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள வணிக நிறுவனங்கள் காலப்போக்கில் வலிமை கொண்டதாக மாறுகின்றன. இதன் விளைவாக, பல்வேறு சமூக, பொருளாதார கொள்கைகளை கூட இயற்றுவதற்கு அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பிரமாண்டமாக வளர்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு, இப்படி வளரும் பெரு நிறுவனங்களால் வரி வருவாய் கிடைத்தாலும். அவை அதன் அதிகாரத்திற்கு அச்சறுத்தலாக மாறுகின்றன. குறிப்பாக, எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலையை அரசு குறைக்க நினைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதால், அதை குறைக்கச் செய்யும் நடவடிக்கை என கொள்ளலாம். மேற்சொன்ன இரு பொருட்களையும் நாட்டின் சிக்கலான நிலையைக் கருதி, விலையை குறைத்துக்கொள்ள வியாபாரிகள் தயாராக இருக்கலாம். ஆனால், பெருநிறுவனங்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் அதிக லாபத்தை விட்டுவிட தயாராக இருப்பதில்லை. இதனால, நாட்டில் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டாலும் அரசு அதை தடுக்க முடியாது. காரணம் பெருநிறுவனங்களின் பொருள் விநியோக கடைகள் அ

லாஜிஸ்டிக்ஸ் வணிகம் எப்படி செயல்படுகிறது என அறிய வாசிக்க வேண்டிய நூல்!

படம்
  லாஜிஸ்டிக்ஸ் பா பிரபாகரன் கிழக்கு பதிப்பகம்   லாஜிஸ்டிக் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழியில் பெயர்ச்சியல் என்று பெயர். ஒரு சரக்கை கொண்டு வந்து கொடுப்பதாக நிறுவனம் கூறினால், அதை அவர்கள் கப்பல் வழியாக, ரயில் வழியாக எந்த முறையில் அதை பொதிவு செய்து கொண்டு வந்து வரிகளைக் கட்டி ஒப்படைக்கிறார்கள், பணம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதே பெயர்ச்சியியல். லாஜிஸ்டிக், சப்ளை செயின் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குவது தொடங்கி கப்பல், ரயில், விமானம் என மூன்று வகையிலும் பொருட்களை எப்படி கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என நூலில் விலாவரியாக விவரித்துள்ளார். இந்த நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக பெயர்ச்சியியல் என்றால் என்ன என தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இதற்கு காரணம், நூலை எழுதியவரே பெயர்ச்சியியல் வணிகத்தை செய்வது வருவதுதான். இதனால் அவர் தான் சந்தித்த பல்வேறு அனுபவங்களை கூறும்போது எளிதாக அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கூறவேண்டுமெனில் மாங்கன்றுகளை ஆப்பிரிக்க நாட்டுக்கு கொண்டு செல்லும் பணியைக் கூறலாம். அதை எப்படி கொண்டு செல்வது என்பதை அனுப்புபவர் கூறுவதில்லை. பெயர்ச்சியியல் நிறுவ

மனநலன் குறைபாடுகளை எதிர்கொள்வது எப்படி? - முதியோர் அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள்

படம்
  பெருகும் மனநலன் பாதிப்பு   1.இந்திய மக்கள் தொகையில் உளவியல் சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு 150 மில்லியன் 2.30 மில்லியன் அளவு மக்கள் மட்டுமே உளவியல் குறைபாடு சார்ந்த சிகிச்சைகளை நாடி அதைப் பெறுகின்றனர். 3.15-29 வயது கொண்ட பிரிவினர் இறப்பில் தற்கொலை முக்கியமான பங்கு வகிக்கிறது. இவர்களின் இறப்பில் நான்காவது முக்கியமான காரணமாக உளவியல் பிரச்னைகள் உள்ளன. 4.2022ஆம் ஆண்டில் மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,526 ஆக இருந்தது என தேசிய குற்ற ஆவண அமைப்பு கூறியுள்ளது. 5.மனம், நரம்பியல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும் முதியோர்களின் அளவு 6.6 சதவீதமாக உள்ளது. 6.அறுபது வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் உளவியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 7.மனச்சோர்வு, பதற்றம் காரணமாக ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு 1 ட்ரில்லியனாக உள்ளது என உலகம் முழுமைக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். மனிதர்கள் உடலைப் பெற்று வந்ததே அவதிப்படத்தான் என்ற

அதிக கட்டண உயர்வால் பயணசேவை நிறுவனத்தை தொடங்கியவர்! - ஈஸி மை ட்ரிப் - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நிஷாந்த் பிட்டி, ஈஸி மை ட்ரிப் நிஷாந்த் பிட்டி, 36 இயக்குநர், ஈஸிமை ட்ரிப் ஈஸி மை ட்ரிப் என்ற பெயரைக் கேட்டதும் முடிவுசெய்திருப்பீர்கள். ஆகாய விமானத்தில் பயணம் செய்வதற்கான முன்பதிவை செய்துகொடுக்கும் நிறுவனம். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொண்டு வணிகம் செய்கிறார்கள். ஈஸி மை ட்ரிப், விமான நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு இயங்கி வருகிறது. 3,716 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 106 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, 1,800 கிளைகளை நடத்தி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த நிஷாந்த் தொடங்கிய நிறுவனம்தான் ஈஸி மை ட்ரிப். அவரது அப்பா, நிலக்கரியை தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். டெல்லியில் இருந்து குவகாத்திக்கு நிலக்கரியை க் கொண்டு செல்லவேண்டும்.   தந்தை வேலை காரணமாக குவகாத்திக்கு சென்றுவிட நிஷாந்தும் அங்கே செல்ல வேண்டிய நிலை. போகும்போது விமான டிக்கெட் விலை சல்லிசாக இருந்தது. ஆனால், திரும்பி வரும்போது நிலைமை அப்படியில்லை. டிக்கெட் விலை அதிகரித்து இருந்தது. நிஷாந்தின் முகவர், கு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மனநிலை குறைபாட்டு சிகிச்சை கட்டணம்- சமாளிக்க முடியாத கட்டண உயர்வு!

படம்
  மனநிலை குறைபாடுகளுக்கான சிகிச்சைக் கட்டணம் உயர்வு – அதிகரிக்கும் பொருளாதார சுமை உடல்ரீதியான நோய்களுக்கு ஏற்படும் செலவுகள், குடும்பத்திற்கு பொருளாதாரச் சுமை களை ஏறபடுத்திய காலம் என்று செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது, மனநிலை குறைபாடுள் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி, ஆய்வுகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன.   அண்மையில் கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறுதியாக அதை சிகிச்சை மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்.   ஆனால் வாரம் ரூ.3 ஆயிரம் செலவு என கட்டணம் உறுதியானது. நல்ல செழிப்பான ஆள் என்றாலும் குடும்பஸ்தரான அவரால் செலவுகளை சமாளித்து செய்ய முடியவில்லை.   சிகிச்சைக்கான செலவுகள் கூடுவதோடு, குடும்பத்திற்கும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்துவதாக மென்பொருள் பொறியியலாளர் நினைக்கத் தொடங்கிவிட்டார். மேலே கூறியுள்ளது   ஆயிரக்கணக்கான மனநிலை குறைபாடுகளை கொண்டவர்களில் ஒருவரின் கதைதான். ஏராளமானவர்கள் வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள். அதற்கு செலவு செய்யவும் பணம

உடலை நேர்த்தியாக்கிக்கொள்ள முயலும் இளைஞர்கள்! பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர் அதிகரிக்கிறதா?

படம்
  கண் இமை திருத்த சிகிச்சை வஜினா மறுகட்டமைப்பு சிகிச்சை ஹைமெனோ பிளாஸ்டி  காஸ்மெட்டிக் மேக் ஓவர்- உடலை அறுவை சிகிச்சை மூலம் திருத்திக்கொள்ள அலைபாயும் இளைஞர்கள்.   இன்று ஒருவர் வேலைக்கு சேர வேண்டுமெனில் நிறுவனங்களில் சில அவர்களின் சமூக வலைத்தள கணக்குகளையும் கேட்கிறார்கள். இந்த வகையில், தங்களின் புகைப்படத்தை பிறர் பார்க்கும்போது கண் புருவம் சரியாக இருக்கவேண்டும். டிஷர்ட் அணிந்தால் மார்பகங்கள் நல்ல பருத்த வடிவத்தில் தெரியவேண்டும். எந்த போஸிலும் மூக்கு அழகாக இருக்கவேண்டும். பேண்ட் அணிந்தால் பெண்குறி புடைப்பாக அதன் வடிவம் வெளியே தெரிவது போல இருக்க கூடாது என பெண்களும், ஆண்கள் தங்கள் வயிற்றை பாளம் பாளமாக வெடித்த வயல்போல கட்டாக இருக்கவேண்டுமென மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல், மனம் பற்றி நிறுவனத்தினர் தவறாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ன இன்று அதிகம் கவலைப்படுகிறவர்கள் உருவாகிவிட்டனர். மூக்கின் வளர்ச்சி பெண்களுக்கு பதினாறு வயதிலும் ஆண்களுக்கு பதினெட்டு வயதிலும் முழுமை பெறுகிறது. இந்த வயதிற்குள் மூக்கின் அமைப்பை மாற்றி அமைத்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும். இதைப்பற்றி மருத்துவர்கள் எடுத

வீடு தேடி வந்து வலியைப் போக்கும் தன்னார்வ அமைப்பு - கேன் சப்போர்ட் தன்னார்வ அமைப்பு

படம்
              வலிநிவாரண சிகிச்சைக்கு நாங்க இருக்கோம் - கேன் சப்போர்ட் அமைப்பின் மருத்துவ சேவை இந்திய மாநிலங்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு, அதன் இறப்பு அளவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. புற்றுநோய் தொடக்கத்தில் கண்டுபிடித்தால் தடுக்கலாம் என்பது உண்மை. ஆனால் அறிகுறிகளை கவனிக்காதவர்களுக்கு இறப்பு உறுதி. இறுதிக்கட்டத்தில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் வலி என்பது நோயாளிகளின் உறவினர்களே பயங்கொள்ளும்படியாக இருக்கும். டெல்லியைச் சேர்ந்த கேன் சப்போர்ட் என்ற தன்னார்வ அமைப்பு, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகரங்களில் வலி நிவாரண சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பு திரட்டும் நன்கொடைகள் மூலமே மாத்திரை, சிகிச்சை, நோயாளிக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் வழங்க முடிகிறது. பொதுவாக இந்தியாவில் தற்போது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் என்பது ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் என்பது ஏழைக் குடும்பங்களை கடன் வலையில் சிக்க வைத்துவிடும். இப்படி வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று மருந்து, மாத்தி

ஸ்மார்ட்மீட்டர் மின்சார சேவையை ஒழுங்குப்படுத்தும்!

படம்
2017ஆம்ஆண்டு இந்திய அரசு, ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. இதன்விளைவாக, எல்இடி விளக்குகளின் விலையை 80 சதவீதம் அளவுக்கு குறைத்தது. சாதாரண மின் மீட்டர்களை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.அது மின்கட்டணத்தை அளவிடுவதற்காக இருக்கும். ஸ்மார்ட் மீட்டர் உங்களது மின்பயன்பாடுகளை அளவிட்டு அதற்கான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வோம். எதற்கு இப்படி சேகரிக்கவேண்டும் என கேள்விகள் எழலாம். மின்சார சேவைகளை வழங்கும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மின்சார வீணடிப்பால் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதனை தீர்க்கவே ஸ்மார்ட் மீட்டர் எனும் முயற்சி. இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர், சௌரப் குமார் இதுபற்றி பேசினார் இத்திட்டம் பற்றி விளக்குங்கள். நாங்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை இந்தியாவிலுள்ள டில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய இடங்களில் நிறுவியுள்ளோம்.  நாங்கள் டில்லியில் மட்டும் பத்து லட்சம் மீட்டர்களை நிறுவியுள்ளோம். பீகாரில் இப்போதுதான் பணிகளைத் தொடங்கியுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நிறுவனங்கள் மூலம் மீட்டர்களை நிறுவி வருகிறோம். ஸ்மார்ட் மீட்

சல்லீசு ரேட்டில் கல்வி கற்க எந்த நாடு பெஸ்ட்?

படம்
துருக்கிதான் காசு குறைவாக தரம் நிறைவாக கல்வி தருகின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள். இதுபற்றிய ஆய்வு 58 நாடுகளில் உள்ள 360 பகுதிகளில் நடத்தப்பட்டு, துருக்கிதான் அனைத்து நாடுகளிலும் பெஸ்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிப்புக்கு ஆண்டுக்கட்டணம் 9,250 பவுண்டுகள் ஆகிறது. இதில் பாதியை செலவழித்தாலே பட்டம் வாங்கிவிடலாம் என்றால் நீங்கள் அதைத்தானே தேர்ந்தெடுப்பீர்கள். அந்த வாய்ப்பை துருக்கி அளிக்கிறது. அந்நாட்டில் வாழ்வதற்கும், படிப்பதற்குமான தோராய செலவு 4, 899 பவுண்டுகள்தான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இம்முறையில் மாணவர் ஒருவர் துருக்கியில் படித்தால் 26 ஆயிரத்து 618 பவுண்டுகளை சேமிக்க முடியும். ஆய்வுப்பட்டியலில் கட்ட ரேட்டில் எங்கு படிக்கமுடியும் என ஆராய்ந்தோம். அதில் இந்தியா, பாகிஸ்தான், மால்டா, மலேசியா ஆகிய நாடுகளில கல்விக்கட்டணம் குறைவாக உள்ளது. டாப் 20 பட்டியலில் இந்த நாடுகள் வந்துவிட்டன. இங்கிலாந்து மாணவர்கள் இந்த நாடுகளுக்கு படிக்க வந்தால், அவர்கள் தாய்நாட்டில் செலவழிக்கும் 71 சதவீத பணத்தை மிச்சம் பிடிக்கலாம். என்ன இந்தியா வந்தால் அதற்கென தேர்வ