இடுகைகள்

கல்விமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரியான கல்விமுறையே மனிதகுலத்திற்கான பேருதவி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்களை மாறுபட்டவர்களாக்கும் கல்வி பிள்ளைகளை நீங்கள் கவனமாக பார்த்தால் விளையாடும்போது, படிக்கும்போது பார்த்தால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர்களின் மீது பெற்றோர்கள் தமது முன்முடிவுகளை, பயத்தை, ஆசைகளை, நிறைவேறாமல் போன கனவுகளை திணிக்க கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளிடம் திணித்து அவர்களை குறிப்பிட்ட வகையில் தீர்மானிக்க முயல்வது தவறு. பிள்ளைகளின் மீது வேலியைப் போட்டு உலகத்தோடு அவர்கள் கொண்டுள்ள உறவைத் தடுக்க கூடாது. நம்மில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு லட்சியங்களை அடைவதற்காக பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்கள். திருப்தி, சுகமான சூழ்நிலை ஆகியவற்றை உரிமை, ஆதிக்கம் செலுத்தும் குணங்களின் மூலம் பெற்றோர் அடைகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுடன் கொண்டுள்ள உறவு என்பது மெல்ல தண்டனையாக மாறுகிறது. ஆசை, ஆதிக்கம் என இரண்டையும் தெளிவாக புரிந்துகொள்வது குழப்பமான செயல்பாடாக உள்ளது. ஆசை, ஆதிக்கம் என இரண்டு செயல்பாடுகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. ஆதிக்கமாக உள்ளவருக்கு அடிமையாக சேவை செய்வது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று

வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் கல்வியை பெறும் வழி- லைப் அகேட் -ஜேகே

படம்
  லைப் அகேட் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஜேகே பவுண்டேஷன் ரூ.230 ஆங்கிலம் கல்வி பற்றிய ஜே கேவின் எழுத்தில் வெளியான நூல் இது. நூலில் கல்வி கற்பவர் எப்படி இருக்கவேண்டும், கற்பிப்பவர் எப்படி தன்னை கற்பித்தலுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என பலவற்றையும் கூறுகிறார். நூலில் பல்வேறு அத்தியாயங்களிலும் ஜேகே சொல்லுவது நிர்பந்தங்களால் மாணவர்களுக்கு மனதில் ஏற்படும் பயம் பற்றியதே. பிறகு இதற்கு அடுத்த இடத்தை பெற்றோரின் குறிக்கோள்கள் பிடித்துக்கொள்கின்றன. இவற்றையெலாம் கடந்த எப்படி ஒரு விஷயத்தை உணர்வது, பார்ப்பது, புரிந்துகொள்வது, கல்வி முறை எப்படி அமையவேண்டும் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஒருவர் தனக்குப் பிடித்தது போல வாழ்வதே நல்லது. பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்தால் அதுவே வாழ்க்கையில் பெரிய சாபமாக மாறிவிடும் என அதற்கான காரண காரியங்களை விளக்கியிருப்பது முக்கியமானது. இன்று ஒருவரை சிறுவயது முதலே சாதனை, வீடியோ, இணையம் என பல்வேறு வகைகளில்   எதையாவது செய்யவேண்டுமென முடுக்குகிறார்கள். நிர்பந்தம் செய்கிறார்கள். இதனால் பாட்டு, நடனம், இசை என பிடிக்கிறதோ இல்லையோ பிள்ளைகள் சென்று

இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  எது கல்வி ? ஜே. கிருஷ்ணமூர்த்தி சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்? பழைய முறைப்படி கல்