இடுகைகள்

இந்தியா- காவல்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செய்திபரிமாற்றத்திற்கு புறாவை பயன்படுத்தும் இந்திய மாநிலம்!

படம்
புறாவிடு தூது !- ச . அன்பரசு ஒரு நிமிஷத்தில் பத்து மெசேஜ்களை வாட்ஸ்அப்பிலும் , டஜன் செல்பிகளை இன்ஸ்டாகிராமிலும் பறக்கவிடும் காலத்தில் தபால் அனுப்புவதே இன்று வினோதம்தான் . பரபரப்பான இந்தகாலத்தில் புறா மூலம் செய்தி அனுப்பினால் உலகம் நம்மை என்ன நினைக்கும் ? விநோதரச மஞ்சரியில் நம் பெயர் வந்துவிடும் . பகடிகளுக்கு அஞ்சாமல் அன்றிலிருந்து இன்றுவரை ஒடிஷாவில் புறாக்களை பேணிவளர்த்து தூது அனுப்பி வருகிறார்கள் . உலகிலேயே இன்று இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் மட்டுமே புறாக்களின் செய்தி சேவை செயல்பாட்டிலுள்ளது . 1946 ஆம் ஆண்டு  இந்திய ராணுவம் ஒடிஷா காவல்துறையிடம் சோதனைகளை செய்துபார்க்க 200 புறாக்களை கொடுத்தது . தகவல் தொடர்பு அற்றுப்போகும் அபாயகரமான சூழலில் காவல்துறை செய்திகளை பரிமாறிக்கொள்ள இப்புறாக்கள் உதவும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் . கோரபுத் மாவட்டதில் தொடங்கி புறாக்களின் செய்திசேவை பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது . 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று , பிரதமர் ஜவகர்லால் நேரு கட்டாக் அலுவலகத்திலிருந்து புறா செய்தி சேவையை தொடங்கிவைத்து சம்பல்பூர் பகுதிக்கு