இடுகைகள்

நீரஜ்சோப்ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதக்கம் வென்றவர் மட்டும்தான் முக்கியமா? - பணப்பரிசுகளை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள்?

படம்
                வெற்றி பெற்றவருக்கே அனைத்தும் சொந்தம் !     இந்தியாவில் விருது வென்றவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமும் பணப்பரிசுகளும் விளையாட்டுத்துறைத்துறையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை . பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் , நோபல்லெஸ் ஆப்லிஜ் என்ற வார்த்தையை 1835 ஆம் ஆண்டு பயன்படுத்தினார் . இதன்பொருள் , சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பணக்காரர்கள் , உழைக்கும் மக்கள் மீது கருணை காட்டுவதில்லை என்பதுதான் . இந்த வார்த்தை அப்படியே இந்திய அரசுக்கும் விளையாட்டுத்துறைக்கும் பொருந்துவது நகை முரணாக உள்ளது . ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா கடினமாக உழைத்து வென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை . ஆனால் அவருக்கு மத்திய அரசு , பல்வேறு மாநில அரசுகள் , தனியார் அமைப்புகள் , விளையாட்டு அமைப்புகள் என பறந்து வந்து ஏராளமான பரிசுகளையும் , ரொக்கப்பரிசுகளையும் வழங்கிவருகின்றன . இந்த வகையில் நீரஜூக்கு 4.85 கோடியும் . மீராபாய் சானுவுக்கு 2.50 கோடியும் நிதியுதவியாக கிடைத்துள்ளது . இந்திய மக்கள்தொகை 1.4 பில்லியனாக உள்ளது . இதில் நாம் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்க