இடுகைகள்

அவுட்லுக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரி

காந்தி தன் வாழ்வில் கண்ட மகத்தான எதிரி!

படம்
காந்தியின் மகத்தான எதிரி! பி.ஏ.கிருஷ்ணன் ஈ.வி. ராமசாமி நாயக்கர் என்ற பெயரைக் கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? உறுதியான உண்மையைப் பட்டென்று பேசும் குரல்தானே! இருபதாம் நூற்றாண்டின் மகத்தான சீர்திருத்தவாதிகளில் பெரியாருக்கு முக்கியமான இடமுண்டு. அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாத பெரியார், மக்களின் தலைவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுடன் பேசுவதற்காகச் செலவிட்டு பரிசாக செருப்புகளையும் கற்களையும் பெற்றவர். ஆனால் தன் வாழ்நாள் முழுக்க சுயநலமாக மட்டும் செயல்படவில்லை. காந்தியின் மகத்தான எதிரிகளில் மூன்று முக்கியமானவர்கள் உண்டு. ஜின்னா, அம்பேத்கர் ஆகியோர் காந்தியைப் பற்றிய கருத்துகளை திடமாக எழுதி ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இதில் பெரியார் மூன்றாவதாக வருகிறார். தமிழ் பேசாதவர்களுக்கு பெரியார் அறியப்படாதவராக இருப்பார். ஆனால் அவரின் கருத்துகளையும் கேள்விகளையும் கேட்பவர், தீவிரமான அவரின் விசுவாசியாக மாறுவது நிச்சயம். இன்றும் கூட பெரியாருக்கு அவரின் முழு அரசியல் சமூக வாழ்க்கையைப் பேசும் வரலாறு கிடையாது. திராவிட இயக்கம் வெளியிட்ட வரலாறு போல் அல்லாது தமிழ் அல்லாதவர்களும் ப

காந்தியை எதிர்க்கும் இன்றைய எதிரிகள் யார்?

படம்
காந்தியின் அன்றைய எதிரிகளும் இன்றைய எதிரிகளும்! டக்ளஸ் ஆலன், பேராசிரியர் மைன் பல்கலைக்கழகம்.  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலும், அவரை நினைவுகூரும் 150 ஆம் ஆண்டு தினத்திலும் கூட அவரின் கொள்கைகளும், அவை பெற்றுத்தந்த எதிரிகளையும் மறக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே புதுமையான மனிதராக காந்தி தெரிந்தார். காந்தி வாழும் காலத்தில் அவரை எதிர்த்தவர்களின் முக்கியமானவர்கள் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாவர்க்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இன்றும் இவரது எதிரிகளின் தொண்டர்கள் காந்தியையும், அவரது கொள்கைகளையும் எதிர்த்து வருகின்றனர். அவரின் பல எதிரிகளின் தமக்கான கொள்கைகளை காந்தியின் பேச்சு மற்றும் எழுத்துக்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி வரும் விநோதமும் நடைபெற்று வருகிறது. அதையும் காந்தி அனுமதிக்கிறார்தான். காந்தி பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதர். நமது 20 ஆம் நூற்றாண்டு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. அணுஆயுதங்கள், சுயலமான அரசியல், தன் முனைப்பை மட்டுமே கொண்ட நுகர்வு, இனக்குழு சார்ந்த வன்முறை அதிகரிப்பு என காந்தி தன் காலத்தில் வலியுறுத்திய பல்வேறு விஷயங்

காந்தி புழங்கிய இடங்கள் - ஒரு பார்வை!

படம்
காந்தி 150 காந்தி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நகரங்களிலும் புழங்கியுள்ளார். அவர் அப்படி சென்று வந்த இடங்கள் ஒரு பார்வை. போர்பந்தர் காந்தி  1869 ஆம் ஆண்டு பிறந்த இடம். இவரது தந்தை திவானாக இருந்தார். தற்போது இந்த இடம் மியூசியமாக உள்ளது. குஜராத் தண்டி 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இங்கு காந்திக்கு சிலை உண்டு. இந்த இடத்தை சுற்றுலாப்பயணிகள் வரும்படி ஈர்க்க தண்டி பாரம்பரிய காரிடாராக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. சம்பரான் காந்திய போராட்ட ங்களில் ஒன்றான சத்தியாகிரகத்தை காந்தி இங்கிருந்தான் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளுக்கு உதவினர் என்ற காந்தியின் எண்ணம் நொறுங்கியது. கௌசானி காந்தி இங்கு அனசக்தி யோகம் நூலை எழுத தங்கியிருந்தார். டெல்லி காந்தி, தன் வாழ்க்கையில் இறுதி 144 நாட்களை கடும் மனவேதனையுடன் கழித்த இடம் இது. இங்குள்ள சாலையின் பெயர் 30 ஜனவரி மார்க். ஆம். காந்தி இறந்த நாள்தான் சாலையின் பெயரும் கூட. பிர்லாஹவுஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அந்த இடத்தின் இன்றைய பெயர் காந்தி ஸ்மிருதி.